பாகம்பிரியாள்

காதலுக்கு முன்
அறியா வயதில், மயிலிறகு குட்டிப்போடும்
என்று ஏங்கித் தவித்த நாட்களைப்பற்றி  
இன்று நினைத்தாலும் சிரிப்புதான்! என்று
இறுமாப்புடன் சொன்ன நாட்கள் பலவுண்டு.

காதலுக்குப் பின்!
நேச மங்கைத் தந்த மயிலிறகு என்பதால்,
நினைக்கும் போதெல்லாம் அது குட்டிப் போடுகிறது
நெடுங்கவிதையையும், நேர்வெண்பாவையும்,  
நெஞ்சத்திற்கு இதமாகவோ அல்லது அதை கசக்கியோ!

இப்பொழுது சொல்லுங்கள்.
மயிலிறகு குட்டிப் போடுமா? போடாதா?
 
படத்திற்கு நன்றி.

http://www.123rf.com/photo_4664743_teenage-girl-with-peacock-feathers.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மயிலிறகு!

  1. மயிலிறகு கவிதை மயிலிறகாய் வருடியது மனதை. அதிலும் அந்த “நெடுங் கவிதையையும்…நேர் வெண்பாவையும்” என்ற வரிகள் பல அர்த்தங்களை உள்ளடக்கியதாய் இருப்பது வியப்பு.

  2. திரு முகில் தினகரன் அவர்களின் மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.