கண்ணகியும் ….சீதையும்

 செழியன்

திருந்தி ….
திரும்பி  வந்தான்  கோவலன்.
விரும்பியே  ஏற்றுக்  கொண்டாள்  கண்ணகியும்.
வாழ  விரும்பி
மதுரைக்கு  வந்தார்கள்  மகிழ்ச்சியாக.
விதி  சிரிக்க ,,,,,,,
விசாரணை  இல்லா  தீர்ப்பால்
சிரம்  வெட்டுண்டு  மாண்டான்
சிலப்பதிகார நாயகன்.
அரக்கர்கள்  சூழ
அசோக வனத்தில்
அவதார  புருஷனை
அனுகணமும்  நினைத்திருக்க
அனுமன்  துணையால்  மீண்டாள் ……….அவளையே
அக்னியில்  குதிக்கச்  சொன்னான்
அவதார புருஷன் …….ராமன்.
குதித்தும்  விட்டாள்
கற்புக்கரசி   சீதை.

கற்புக்கரசிகளுக்கும்…….
களிப்பான  வாழ்வு  அமையவில்லை .
காவிய  நாயகனுக்கும் -அவதாரபுருஷனுக்குமே
வாழ்க்கை  இப்படி இருக்க
நான்    அவர்களாக  வாழவிரும்பவில்லை .
சாமான்யனாகவே …….வாழ்ந்து  விடுகிறேன் .

படங்களுக்கு  நன்றி.
http://en.wikipedia.org/wiki/Kannagi

http://simplehindubhai.blogspot.in/2011_02_01_archive.html

1 thought on “கண்ணகியும் ….சீதையும்

  1. சராசரி மனிதர்களின் சாமான்ய வாழ்க்கையே தேவலாம் போல் இந்த அவதார புருஷர்களை பார்க்கும் போது…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க