” சூரியன் கருணை “
வெய்யிலால் வெப்பம் தனிலிருந்தே மீளாமல்
சேயான எங்கள் மேல் ஏனுனக்கு
கருணை இல்லை சுடுகின்றாய்
கொதிக்கின்றாய், சுள்ளென்று எரிக்கின்றாய்
தகிக்கின்றாய் தவிக்கின்றோம்
தாளாமல் பொழிகின்றோம் வியர்வைதனை
அருந்தும் நீரனைத்தும் ஆவியாய்ப் போகுதிங்கே
அத்தனை நீர் ஆவியையும் எடுக்கின்றாய்
போதாதா மொத்தமாய் சேர்த்து வைத்து
பொழிய வேண்டாமா பெருமழையாய்
மாயமாய் மறைந்து மற்றோரு உருவம்
படைத்திடவே நாமென்ன சாயாதேவியா
மாயங்கள் செய்கின்ற மாயக்காரியா
நேயத்தை மனதில் கொண்டு
குளிர வேண்டாமா பூமித்தாயும்
மகிழவேண்டாமா உழவர்களும்
பொழிந்திடுவாயுன் கருணை மாரிதனை
அருணனே ஆதித்தா சூரியனே ஆதிமுதல்
ஆனவனே வருணனை விடுவிப்பாய்
துதிக்கின்றோம் உன்தனையே
பொழிக மாரி பொழிக மாரி!பொழிக மாரி!
படத்திற்கு நன்றி
http://moblog.net/view/260122/rain-and-sunshine