பவளமல்லியின் பகட்டுச் சிரிப்பு
குமரி எஸ். நீலகண்டன்

நான் ஒவ்வொரு முறை
செல்கிற போதும்
அந்தப் பவளமல்லி மரம்
பழுப்பு வண்ணச் சேலையுடன்
குலுங்கி குலுங்கிச்
சிரிக்கிறது.
அதன் சிரிப்பலைகள்
மரத்திலிருந்து சிந்திச் சிதற
அதன் முகமும்
வெள்ளைச் சிரிப்பும்
பவளமணிகளாய் பரந்து
தரை முழுக்க…….
விரிந்த தரையில்
விழுந்த சிரிப்பில்
பெருமிதமாய் முகம்
பார்க்கிறது
அந்தச் செந்தரை.
=======================================
படத்திற்கு நன்றி: http://balavasakan.blogspot.com

நல்லதொரு ரசனை, சம்பு நடை. அழகு வேறு. எழில் வேறு. அழகு தெரியும். எழில் புரியும். அழகான பவளமல்லிக்கு எழிலான ரசனை.
பவளமல்லிகளின் பட்டுச் சிரிப்பு கவிதையின் வரிகளுக்கிடையிலும்..
பெருமிதம் கொள்ளலாம் நீங்களும்.