2011: இந்திய மக்கள் தொகை 121 கோடி
2011ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்து முடிந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் ஆண்களின் மக்கள் தொகை 51.54 சதவீதமாகும். பெண்களின் அளவு 48.46 சதவீதமாகும் எனப் புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சக செயலர் ஜி. கே. பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் சிறப்பு அம்சங்கள் :
* 2001ஆம் ஆண்டு துவங்கி 2011 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 18.1 கோடி உயர்ந்துள்ளது
* கடந்த நூற்றாண்டில் (1911-21 தவிர) நடந்த கணக்கெடுப்பில் கண்ட பெருக்க விகிதத்தைவிட தற்போதைய மக்கள் பெருக்கம் குறைவானதாகும்.
* நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்திர பிரதேசமாகும். அதன் தற்போதைய மக்கள் தொகை 19.95 கோடியாகும். அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா மாநிலம் 11.2 கோடி மக்கள் தொகையுடன் இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
* இருப்பினும் உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்கள் பெருக்க விகிதம் சென்ற (1991-2001) பத்தாண்டுகளைவிடத் தற்போது குறைந்துள்ளது.
* நடந்து முடிந்த கணக்கெடுப்பின்படி 25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஆண்டு மக்கள் தொகை பெருக்க விகிதம், 2 சதவீததிற்கும் குறைவாகும்.
* அதே போல 15 மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை பெருக்க விகிதம், ஆண்டிற்கு 1.5 சதவிகிதத்திற்கும் குறைவாகும்.
* உத்திர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் கூடுதலாகும்.
* தற்போதைய கணக்கெடுப்பின்படி ஆண் பெண் விகிதாச்சாரம், சென்ற முறை 933 ஆக இருந்தது. தற்போது 1000-க்கு 940 ஆக உயர்ந்துள்ளது.
============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை