மனப் போதை
பத்மநாபபுரம் அரவிந்தன்
போதையென்பது வஸ்துக்களிலல்ல
அது.. மனம் சார்ந்த நிலமைகளின்
வலிமைகளைப் பின்பற்றி
மூளையைக் கிறக்குவது…
மனச் சோர்வின் போது
ஒரு மிடறு போதும் … தலைக்கேறித் தாவும்
மகிழ்ச்சியின் உச்சத்தில் கோப்பைகள் பல
உள்ளிறங்கிப் போனாலும்
தாளம் தப்பித் தள்ளாடாது…
உதடுக்கும் மதுக் கோப்பைக்குமிடையே
மெல்லிய நூலிழையால் இணைந்து கிடக்கிறது
போதைக் காற்றாடி …
இருப்பதா பறப்பதாவென்பது
மனக் காற்றின் வேகத்தைப் பொறுத்தது….
படத்துக்கு நன்றி
http://www.123rf.com/photo_7789782_3d-rendering-of-a-wine-glass.html
அனுபவித்து எழுதியதோ?
முகில் தினகரன் அவர்களே,
அனுபவிக்காமல் எப்படி எழுத முடியம் ? .. நன்றி – பத்மநாபபுரம் அரவிந்தன் –