பாகம்பிரியாள்

காலை முதலே அடிவயிற்றில் ஏதோ சங்கடம்
காலைச் சுற்றிக் கொண்டிருந்த சுட்டி மகள்
முதல் முறையாய் பள்ளிக்கூடம் போகிறாள் என்று
முனைப்பாய் நடக்கிறது  பலஏற்பாடுகள்.
பூவாய் இருந்தவளை பக்குவமாய் குளிப்பாட்டி,
புதுமணம் வீசும் உடையைப்போட்டு, உணவு ஊட்டி,
கண்ணில் பட்டவரிடெல்லாம், வாய் வலிக்கச் சொல்லி,
தைரியத்தைத் திரட்டிவந்து கொண்டிருந்த எனக்கு ,
பள்ளிக்கூடத்தின் அருகில் வந்ததும் பதைபதைப்பில்
போனது பாதி உயிரும், பாதி பேச்சும். சைகை மொழியில்
பேசிய என் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு நடந்து போனாள்
நொடிப்பொழுதில் என் செல்ல பெரிய மனுஷி!   
திரும்பிய என்னை திகைக்க வைத்தது மனைவி
அனுப்பிய குறுஞ்செய்தி! அழுதது எ(இ)ந்தக் குழந்தை?
ஆறுதல் சொல்ல வந்தவர் , தேறுதலுக்கு வழியின்றி,
அழுத காட்சி  பலவற்றைக் கண்ட அங்கிருந்த
 குல்மொஹரும் , இது தினமும் நடக்கும் கதைதான்
என்று மௌனமாய்  சிரித்தது தன் வண்ண இதழ்களை சிந்தி!
     
படத்துக்கு நன்றி

http://www.shutterstock.com/pic-83558560/stock-photo-cute-school-girl-running-high-quality-d-illustration.html

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “யார் குழந்தை?

  1. உங்களுக்கு நான் என் பெண்ணை புவனேஸ்வரம் கேந்திரிய வித்யாசாலையில் சேர்த்து விட்டு வந்ததை, யார் சொன்னார்கள், பாகம்பிரியாள்?
    இன்னம்பூரான்

  2. கவிதை என்னும் கண்ணாடி வழியாகப் பார்த்து தெரிந்து கொண்டேன்! தங்கள் பாராட்டுக்கு நன்றி திரு இன்னம்பூரான் அவர்களே.

  3. பாராட்டிய திரு அண்ணா கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *