இலக்கியம்கவிதைகள்

தேவதையை ……தேடுகிறேன்

 

செழியன்

பெண்ணே !
வில்  போன்ற நெற்றி …அதில்
விண்ணில் இருக்கும்  நிலவு  போல்
வட்டமான …….
அந்த  வண்ண  குங்குமப்  பொட்டு ……

மையுண்ட  விழிகளில்
கயல்  துள்ளுவதாக சொன்னார்கள்
காவியத்தில்  கவிஞர்கள்  .
மனமென்னும்  தூண்டிலையே
முறிக்கும்
அந்த  மையுண்ட  விழிகள் …….

மஞ்சள்  பூசியே ..
மாசு -மரு  அற்ற
மங்களகரமான .
அந்த  மஞ்சள்  முகம்……..

காதோரம்  லோலாக்கு ..
கடக்கும்போதும் ..
கழுத்தைத்  திருப்பும்போதும்
கண்களுக்கு காட்டும் பரதம்
கண்களை இமைக்க  மறக்க வைக்குமே
அந்த  லோலாக்கு ……
வழியும்  கூந்தலை
வகிடு  எடுத்து -வாரி பின்னி
இடை தொடும்
ஜடை  போட்டு
இறுதியில் …
பட்டு  குஞ்சம்  கட்டி
நடக்கும் போதெல்லாம்
நாட்டியம்  ஆடுமே
நல்  முத்து வைத்து  கட்டிய
அந்த  வண்ணக்  குஞ்சம் …….

வாழைத்  தண்டு  கைகளில்
வண்ணங்களில்   வளையல்கள்
கைகளை  அசைக்கும்போது …..
ஒலிக்குமே   வளையோசை …
நகைப்பது ..நீயா ? அல்ல   வளையல்களா?
கேட்க  சொல்லுமே ..
அந்த  வளையல்கள் …..
பட்டுப்  பாவாடை -சட்டை  போட்டு
தாவணி கட்டி
நடக்கும் போதெல்லாம்
நலம் விசாரிப்பது போல
சரக் ..சரக் ….என   
சரணம்  பாடுமே …அந்த  பட்டுப் பாவாடை
அதற்கு .
எசப் பாட்டு  பாடுமே
சலக்   சலக்   என
கணுக்கால்களை    கட்டிக்  கொண்டு இருக்குமே
அந்த  கொலுசு …….
இவைகளோடு   
நீ …நடந்து  வரும்போது ..
தேவதையாகத்    தெரிந்தாய்.
இன்று …..
இவைகள்  தேவையில்லை  என  உதிர்த்து  விட்டாயோ .
இனி  …..தேவதையை   
தேடத்தான்  வேண்டுமோ ?
அல்ல
கனவில்தான்   காண வேண்டுமோ ?
 

http://www.maebag.com/Content.php?Code=15506&Param=Product

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (3)

  1. Avatar

    கவிதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் கொடுத்து அதிர வைத்து விட்டீரே…நியாயமா?

  2. Avatar

    arumai sir……..

  3. Avatar

    DINAKARAN  SIR……SARIYAKA SONNIRKAL…MUDICHAI  AVIZHKKAAVITTAALUM  PARAVAAILLAI .ARUKKAAMAL IRUNTHAL  SARI.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க