ஐக்கியா & வல்லமை சிறுகதைப் போட்டி!

 

ஆகஸ்ட் (2012) சிறுகதைகள்

 

வெங்கட் சாமிநாதன்

வணக்கம். வல்லமைக்கு இந்த மாதம் வந்த மொத்த சிறுகதைகள் 18.  அவற்றில்,  நான் சிறந்ததாகக் கருதும் கதையைத் தேர்வு செய்யச் சொன்னீர்கள். தேர்வு, சிறந்தது, நன்றாக எழுதப்பட்டது என்ற முடிவுகள் எல்லாம் அவரவரது சுயம். இந்த அடிப்படைப் பார்வையை ஒத்துக்கொண்டால், எனக்குப் பட்டதைச் சொல்வது சிறந்தது என்று ஏதும் ISI முத்திரை குத்தும் விவகாரம் இல்லை. என்பது புரிந்தால், தேர்வு செய்யப்பட்ட கதையை எழுதியவர் புளகாங்கிதம் அடைய வேண்டியதில்லை. மற்றவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. இதெல்லாம் பால பாடங்கள். ஆனாலும் தமிழர்கள், தமிழ்ச்சூழல் எல்லாம் தொட்டாச் சுருங்கிகள். அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, டால்ஸ்டாய் என்னும் ஒரு சிகரம் ஷேக்ஸ்பியர் என்னும் இன்னொரு சிகரத்தைக் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சியிருக்கிறார்.

இந்தப் பதினெட்டு கதைகளில் சில புதிய பார்வைகளை தந்தவர்கள் உண்டு அவர்கள் லட்சிய உலகை முன்னிறுத்துகிறார்கள். சிலர் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புகளைத் திரும்பச் சொல்கிறார்கள் சிலர்  அலங்கார வார்த்தைகளை, உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கொட்டுகிறார்கள். வார்த்தைகள் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றன. யார் யார் எந்தக் கதை என்று நான் சொல்லவில்லை.

இவற்றில் எல்லாம் சுதாகர் எழுதியுள்ள காட்சிப் பிழை என்ற கதை, நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும், தன் ego -ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம். மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும் தனனை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இலலாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லாமே என்னும் செல்வியும், மரணப்படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்ட கொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தபடுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது மாறுவதே இல்லை. சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள்.

இங்கு  தான் சுதாகர் எழுத்தை நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். இனி அவர் எழுத்தை எதிர் நோக்கியிருப்பேன்
 

கே.எஸ்.சுதாகர்

பொறியியலாளரான இவர், 1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் இலங்கை மற்றும் பல நாடுகளில் வெளிவரும் பல பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். ’எங்கே போகின்றோம்’ என்ற இவரது சிறுகதைத்தொகுதி குமரன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. பல்வேறு சிறுகதைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறார

 

 

பரிசுபெற்ற சிறுகதை :

காட்சிப் பிழை

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ஆகஸ்ட் (2012) சிறுகதைப் போட்டி முடிவு

  1. Congratulations Mr Sudhakar. You have a unique style of writing and that is confirmed by getting selected for Aug-2012 competition. Please continue writing more..contribute more to the tamil literature.

  2. வாழ்த்துக்கள் சுதாகர். நல்ல எழுத்து நடை. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
    மனோகரன்

  3. ஐக்கியா & வல்லமை சிறுகதைப்போட்டியில் எனது சிறுகதையை தெரிவு செய்தமைக்கு நன்றிகள். திரு வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களின் கருத்துகள் மேலும் என்னை எழுதத் தூண்டுவனவாக உள்ளன.

    கருத்துகள் கூறிய இளங்கோவன், ஜெயஸ்ரீ, தமிழ்த்தேனீ என்போருக்கும் – கதையை வாசித்தவர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.

  4. ‘…சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள்…’
    ~ உங்கள் விமரிசனமும், அணுகுமுறையும் என்னை கவர்ந்தன, வெ.சா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *