காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் படிப்பில் செலுத்தும் கவனத்திற்கேற்ப, குழந்தைகளால் பெருமை சேரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கலைஞர்கள், வீடு மனை வாங்கும் பொழுது, பத்திரங்களைக் கவனமாகப் படித்துப் பார்த்து வாங்குவது நல்லது. பணியில் உள்ளவர்கள், அரசுத்துறையினர் சார்ந்த விஷயங்களில் கவனமுடன் இருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் கிட்டும். மாணவர்களின் முயற்சிகளில் முழுமையான ஈடுபாடு இருந்தால் எல்லாமே நன்மையாகும்.

ரிஷபம்: மாணவர்கள் கவனமாக இருந்தால், கல்வியில், ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் பொது வாழ்வில் இருப்பவர்கள், எடுக்கக்கூடிய தீர்மானங்கள் சரியானதாக என்று சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு, இது வரை இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கி மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகள் திட்டமிட்டுச் செயல்பட, எதிர்பார்த்த இனங்களில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலைகளால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பெண்கள் தக்க வைத்துக் கொள்வார்கள். கலைஞர்கள், கலைத்துறையில் புதிய முயற்சிகளில் தகுந்த வழிகாட்டுதலுடன் செயல்படவும்.

மிதுனம்: இந்த வாரம் வியாபாரிகள் மேற்கொள்ளும் பயணம் பயன்கள் தரும். பொது வாழ்வில் இருப்பவர்கள், விரோதிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறையாக இருந்தால், வேலைகள் தேங்காமலிருக்கும். மாணவர்களுக்கு அவ்வப்போது பணச்சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். தொழிலாளர்களுக்கு விசேஷமான பலன்கள் கிடைக்கும். அரசு விவகாரங்களில் கிடைக்கும் அனுகூலங்களால், சுய தொழில் புரிபவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும். கலைஞர்கள் சிறிது கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழலுக்கு ஆளாகலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள், சட்டப்பிரச்னைகளில் தகுந்த வழிகாட்டுதலுடன் செயல்படவும்.

கடகம்: மாணவர்கள் வரவுக்கு ஏற்றவாறு செலவினங்களைச் செய்வதுதான் புத்திசாலித் தனம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேசும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வெற்றி வந்து சேரும். கலைத்துறையில் உள்ளவர்கள், தங்களது வேலைகளில் புதுமையைப் புகுத்தினால் நல்ல அங்கீகாரம் கிட்டும். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், வியாபாரிகள், தங்களது தன்னம்பிக்கையால் அனைத்தையும் சமாளிப்பார்கள். தொழிலாளர்களுக்கு அனுகூலங்களாக காரியங்கள் நடைபெறும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், பணியில் இருப்பவர்களின் வேலைகள் யாவும் சீராக ஓடிக் கொண்டிருக்கும்.

சிம்மம்: வியாபாரிகள் நன்கு முயற்சி செய்தால் வங்கி தரும் ஆதரவை வளத்துக்கு அஸ்திவாரமாக மாற்றிக் கொள்ளலாம். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளைக் கட்டுக்குள் வைத்து விட முடியும். மாணவர்கள் நண்பர்களைக் கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையான இடங்களில் பணிவைப் பயன்படுத்தினால், நல்ல பெயரோடு பெறும் லாபமும் அதிகரிக்கும். இந்த வாரம் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

கன்னி: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்காமலிருக்கும். வியாபாரிகள் புதியவரை நம்பிப் பொறுப்புக்களைத் தருவதைக் காட்டிலும் நேரடியாக நீங்களே கவனம் செலுத்தி வர, லாபம் தடையின்றி வரும். வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்னைகளைப் பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகும். சுய தொழில் புரிபவர்கள். தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல் படுவார்கள். கலைஞர்களுக்கு, எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போகும்.

துலாம்: கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால்,வேண்டிய சலுகைகளைப் பெறலாம். பெண்கள் கைப் பணத்தைப் பார்த்துச் செலவழியுங்கள். கடன் வாங்க வேண்டியிராது. இது வரை வேலையில்லாமல் இருந்தவர்கள், நல்ல வேலையில் அமர்வார்கள். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் வெற்றி வாகை சூடும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். இந்த வாரம் கலைஞர்களின் கலகலப்புக்கு இடையே சிறிது சலசலப்பும் அவ்வப்போது தலை காட்டும். எனவே சக கலைஞர்களின் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்: பெண்களுக்கு உறவினரோடு உரையாடி மகிழும் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கும். பெற்றோர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிள்ளைகளை உற்சாகப் படுத்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும். இயந்திரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயலாற்றுவதோடு, தகுந்த பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரிகள் புதிய துறையில் இறங்கும் முன்பு, ஏற்ற இறக்கங்களை அறிந்து கொண்டால் அதற்குத் தக்கவாறு செயலாற்ற முடியும்.

தனுசு: இந்த வாரம் வீண் செலவால், உங்கள் பணம் கரையும். மாணவர்கள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமலிருந்தால் சிந்தனை வளம் வற்றாமலிருக்கும். வியாபாரிகள் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கமறிந்து செயல்பட்டால் பெரும் தொகை முடங்காமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் காலத்திற்கேற்ப மாறுதல்களை மேற் கொண்டால், போட்டிகளை முறியடிப்பது சிரமாய் இராது. கலைஞர்களுக்கு லாபம் நல்கும் பெரிய நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை சற்று ஒத்திப் போடுவது நல்லது.

மகரம்: மாணவர்கள் முன் கோபத்தை வளர விடாமலிருந்தால் அதிக நன்மையும் லாபமும் கிடைக்கும். கலைஞர்கள் பாடுபட்டுத் தேடிய நல்ல பெயரைப் பழுதாக்கும் விஷயங்களிலிருந்து விலகியிருப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் திடமான மனதுடன் இருந்தால் நல்ல வழிகாட்டல் உங்களை மேலும் உயர்த்தும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தேவையான இடங்களில் அதிகாரம், அன்பு இரண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், பிறரின் தலையீடின்றி பணிகளைச் செய்ய இயலும். வியாபாரிகள் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இல்லாவிட்டால், வீண் தொல்லை வாசலில் வந்து நிற்கும்.

கும்பம்: பெண்கள் குழப்பம் தரும் விஷயங்களில் தகுந்த ஆலோசனையை மேற்கொள்வது நல்லது. கடினமான வேலைகளைப் பிறர் உங்கள் தலையில் கட்டலாம். எனவே பணியில் இருப்பவர்கள் கவனமாகச் செயல்படவும். வியாபார நெருக்கடியின் காரணமாக வியாபாரிகள் பங்குதாரர்களிடமிருந்து சில முணுமுணுப்புக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கலைஞர்கள் திட்டமிட்டுச் செயல் புரிவது என்பதைக் கடைப்பிடித்து வந்தால், சக கலைஞர்களின் அனுசரணையைப் பெறலாம். பணத்தட்டுப்பாடு இல்லாமலிருக்க பொது வாழ்வில் இருப்பவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது

மீனம்: மாணவர்கள் பொது இடங்களில், எல்லை மீறாமல் நடந்து கொண்டால் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வியாபாரிகள் நிறுவன விஸ்தரிப்பு வேலைகளில் உள்ள நிறை குறைகளை அவ்வப்போது கவனிப்பது மூலம் பணம் மற்றும் நேரம் இரண்டும் விரையமாகாமலிருக்கும். இந்த வாரம் உறவுகளின் வருகையால், குடும்பத்தினரின் மன அமைதி குறையலாம். உயர் பதவியில் இருபவர்கள் பணியாளர்களிடம் தேவையற்ற கெடுபிடி காட்டுவதைத் தவிர்ப்பது நலம். அடுத்தவர்க்கு உதவி செய்கையில் உங்கள் இரக்க குணத்தைப் பிறர் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.