பாகம்பிரியாள்

இன்றைக்கும் அலுப்பு, சலிப்பு ஏதுமில்லாமல்
அம்மாதான் உணவு போடுகிறாள் எல்லோருக்கும்.
ஆனால் உணவுக் கவளத்தை விடவும் நாங்கள்
 அதிகம்  உண்டு மென்றது  மௌனம் தான் .
ஏதோ ஒரு கவலை அவளை வாட்டுகிறது.  
ஆனால் அருகில் செல்ல யாருக்கும் பயம்.
எப்போதாவது என் சின்னப்பெண்ணை பார்த்து
அபூர்வமாய் மலரும் ஓர் சின்ன சிரிப்பு.
இரும்பு மனுஷியை தேற்றும் வழி தெரியாது
துவண்டு போன என்னை விட்டு தூக்கம் விலகியது.
இரவில் நீர் குடிக்க சென்ற என் கண்ணில் பட்டது
எதிர்பாராமல் நடந்த ஓர்  நிகழ்வு.  .
 

பாட்டியிடம் அவளுக்குத் தெரிந்த மொழியில்
பேத்தி கேள்விகளைத் தொடுக்கிறாள்.
நீண் ட அமைதிக்குப்பிறகு அருவியாய் வீழ்ந்தது,
நெஞ்சில்  அடைபட்டுக்கிடந்த நினைவுகள் யாவும்.
பிஞ்சு விரல்களின் வருடலைத் தாங்க இயலாது
பழுப்பேறிய தலை சாய்ந்து கொள்ள இடம் தேடியதில்,
மடி தன்னை மழலை மெல்லவே காட்ட,
குலுங்கியதில் வெடித்தது ஓர் அழுகை. 
இரும்பு மனுஷியை கரும்பு மனுஷியாய்
மாற்றிய  என் மகள்  ஏதும் அறியாது   
பொம்மையுடன் உறங்கிக் கொண்டிருக்கிறாள்
பூஞ்சிரிப்பு  ஒன்று உதட்டில் உறைந்திருக்க!
 
படத்திற்கு நன்றி

http://www.rgbstock.com/photo/mgF5K92/Old+Woman

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இரும்பு மனுஷி!

 1. அரும்புகளின் குறும்புகளை கரும்பாய் ரசிக்கும் இரும்பு மனுசிகளின் இதயம் விரும்புவது சந்ததிகளின் சந்தோசம் மட்டுமே! என்பதை அருமையாய் கவியில் தந்த கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

 2. திரு முகில் தினகரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி

 3. பிஞ்சு விரல்களின் வருடலைத் தாங்க இயலாது
  பழுப்பேறிய தலை சாய்ந்து கொள்ள இடம் தேடியதில்,
  மடி தன்னை மழலை மெல்லவே காட்ட,
  குலுங்கியதில் வெடித்தது ஓர் அழுகை.

  மனதை வருடும் வரிகள். நல்ல கவிதை

 4. ஓ,
  இதுதான் ‘ஜெனரேஷன் கேப்’ என்பதோ…!
                  -செண்பக ஜெகதீசன்…

 5. ஜெனரேஷன் கேப்பை நிரப்புவது பேரன் பேத்திகள்தானே? தங்கள் பாராட்டுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.