திருவாரூர் ரேவதி
 
முல்லை மலர் போன்ற
முத்து பல் விரித்து
சின்ன கருவிழியில்
மின்னும் ஆனந்தம்
 
நடராஜரை நினைவூட்டி
நர்த்தனமாடும் கருங்குடுமி
வட்ட முகத்தின் வடிவழகை
கூட்டும் சின்ன கன்னங்கள்
 
குப்புற வைத்த 
குடைமிளகாயின்
கீழ் ஒட்ட வைத்த உதடுகள்
 
வெள்ளி அரைஞனுடன்
தாயிடம் கற்ற தமிழின்
முற்று பெறாத 
வார்த்தையுமாய்
 
விளையாட முடியாமல்
அடைப்பட்டு கிடக்கும்
அரண்மனைக் கிளியும்
 
அரையாடையும் அணியாத
சின்ன குயிலின் சிரிப்பும்
தாலாட்டும் தாய்க்கு ஒன்றுதான்

படத்திற்கு நன்றி
 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க