இடப்பெயர்ச்சி
பக்கத்து வீட்டுத் தாத்தா
திரும்பாப்பயணம் புறப்பட்டு விட
சலனமின்றி
இடம் பெயர்ந்தது சாவிக்கொத்து
முன்னுரிமைப்படி..
சாய்வு நாற்காலிக்கு அடுத்த தலைமுறையும்
சொகுசு நாற்காலிக்கு மூன்றாம் தலைமுறையும்
அவசரமாய் அடித்துக்கொண்டு
ஆரவாரமாய் இடம் பெயர
அமைதியாய் நிகழ்ந்ததோர் இடப்பெயர்ச்சி..
துணி மூட்டையுடனும் தட்டுடனும்
திண்ணையில் பாட்டி.
படத்திற்கு நன்றி : http://valerioberdini.photoshelter.com/gallery/Life-on-the-Pavement-Kolkata-India/G0000.2lGdfeOmrg
இன்று தங்களின் இடுகையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்கிறேன்! தங்களின் தகவலுக்கு மட்டும்! ரவிஜி