புத்தரும் ஆதிசங்கரரும்
விசாலம்
கிமு ஆறாம் நூற்றாண்டில் புத்தர் அவதரித்ததும் புத்தமதம் ஸ்தாபனம் ஆனதும் நம் எல்லோருக்கும் தெரியும்., பின் ஹிந்து மதத்தில் இருந்த பல கட்டுப்பாடுகளும் .நியமங்கள் ஹோமங்கள் யாகங்கள் .போன்றவைகளாலும் மக்களின் மனம் புத்த ,சமண மதத்தில் நுழைய விரும்பியது .தவிர சம்ஸ்கிருத மொழியில் பூஜை .புனஸ்காரங்கள் எல்லாமே இருந்ததால் புரியாத மொழியிலிருந்து கொஞ்சம் மாற்றம் தேவைப்பட்டது இப்படி ஹிந்து மதமும் புத்த மதமும் பல வித்தியாசங்கள் கொண்டிருந்தாலும் முடிவில் அணுக வேண்டிய இடம் ஒன்றாகத்தான் இருந்தது . பகவான் புத்தரின் காலத்திற்குப்பிறகு தோன்றிய ஆதி சங்கரர் .பெரிய வேதந்தவாதியாகி ,அத்வைத சித்தாந்தத்தில் கரை கண்டு சம்ஸ்கிருத மொழியில் மிகச்சரளமாகப்பேசி பாரத தேசத்தையே தன் திருப் பாதங்களினால் வலம் வந்து ஹிந்துமதத்தைத் திரும்பவும் தூக்கி நிறுத்தினார் நான் புத்தரின் சரித்திரமும் , .ஸ்ரீஆதிசங்கரரின் பஜகோவிந்தமும் பல விஷயங்களில் ஒத்துப்போவதைக்கண்டேன்
கௌதம புத்தருக்கும் ஶ்ரீ ஆதிசங்கரருக்கும் பல ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன் . சித்தார்த்தர் பிறப்பதற்கு முன் அவரது தாயார் மஹாமாயாவுக்கு ஒரு கனவு வந்ததாம் அதில் ஒரு குட்டியானை அவளையும் குழந்தையையும் வாழ்த்திவிட்டுச் சென்றதாம் யானை என்றால் கணபதியின் ஸ்வரூபம் என எடுத்துக்கொள்ளலாம்
அதேபோல் பலவருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமல் சிவகுரு .ஆர்யாம்பாள் தம்பதிகள் சிவபூஜை செய்ய சிவனும் அவர்களுக்கு தரிசனம் தந்தப்பின்னர் தானே அவர்களுக்கு வந்து பிறப்பதாக அனுக்கிரஹம் செய்தார் ,அதேபோல் சிவனே ஆதிசங்கரராக அவதாரம் செய்தார் .சிறுபிராயத்திலேயே வேதம் உபநிஷத், மஹாபாரதம் ,இராமாயணம் போன்றவைகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுவிட்டு .தனது ஐந்தாவது வயதிலேயே பூணலும் போட்டுக்கொண்டார் .இவர் தனது தந்தையை மிகச்சிறிய வயதிலேயே இழக்க நேர்ந்தது
.இதேபோல் சித்தார்த்தருக்கும் தன் தாயாரை பிறந்த ஒரு வாரத்திலேயே இழக்க நேர்ந்தது சித்தார்த்தர் பிறந்தவுடன் ஒரு பெரிய ஜோசியர் இவர் பெரிய சன்யாசியாகவோ அல்லது பெரிய சைன்ய தலைவனாகவோ வருவான் என தெரிவிக்க அவரது தந்தை தனது மகனுக்கு அரசகுமாரனுக்குத் தேவையான அத்தனை விதப் பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் .ஆனால் சித்தார்த்தரின் மனம் இதில் நாடவில்லை எப்போதும் தனிமையே நாடினார் .சுகபோகங்களை வெறுத்தார் மனைவி குடும்பம் என்பதையும் வெறுத்தார் .இதனால் பயந்துப்போன அரசர் சுத்தோதனர் அவருக்கு திருமனம் செய்வித்தால் மனம மாறலாம் என நினைத்து யசோதராவை மணம் செய்வித்தார் .ஆனாலும் சித்தார்த்தரின் மனம் மகிழ்ச்சியடையாமல் ஒரு தேடலநோக்கிப் போய்க்கொண்டிருந்தது அவர் பதினாறு வயதில் திருமணம் செய்துகொண்ட போது யசோதராவுக்கும் வயது பதினாறு ..
சாதரணமாக அந்த வயதில் ஆண்பிள்ளைகள் சிருங்கார ரசத்தில் பல புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் சித்தார்த்தரோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார் . திருமணமாகி பதிமூன்று வருடங்கள் கழித்து ராஹுல் பிறந்தான் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது வயது 29. . எப்போதும் சித்தார்த்தர் எதையோ நினைத்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால் அவரை அந்த யசோதரா கவரவில்லை .காமத்தை அவர் நாடவில்லை. இதை ஹிந்தியில் வடநாட்டுக்கவி ஸ்ரீமைத்லி சரண்குப்தாஜி தன்னுடைய யசோதராவின் காவ்யத்தில் அந்தப்பெண்மணியின் நிலைமையை மிகவும் ஆழமாகச் சித்தரித்திரிக்கிறார் பதிமூன்று ஆண்டின் பின் குழந்தைப்பிறந்த அன்றே அவர் இரவில் வீட்டைவிட்டுச்சென்று விட்டார், எங்கே பந்த பாசக்கயிறில் சிக்கிக்கொண்டுவிடுவோமா? என்ற பயம் தோன்றிருக்கலாம் .அல்லது ஜகத்தில் மதகுருவாக ஆக எல்லா கலைகளும் தெரியவேண்டும் என்று மதன் மிஸ்ராவின மனைவி பாரதி சொன்னாளே அதுபோலவா இது என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது
இதை ஆதிசங்கரர் வாழ்க்கையிலும் காணமுடிகிறது, மீமாம்சு தத்வஞானி குமாரிலபட்டரின் சிஷ்யரான மண்டன மிஸ்ராவுடன் ஒரு சமயம் சங்கரருக்கு மோதும் வாய்ப்பு வந்தது அந்தப்பட்டி மன்ற நீதிபதியாக மிஸ்ராவின் மனைவி பாரதி இருந்தாள். இரண்டு வாரங்கள் தர்க்கம் நடந்தது எங்கே தன் கணவர் தோற்றுவிடுவாரோ என நினைத்து அவள் சங்கரருக்கு ஒரு கேள்வி கேட்டாள்
“காதலுக்கும் காமத்திற்கும் என்ன வேறுபாடு ” ?
அதன் பதிலை மறு நாள் சொல்வதாகக் கூறிவிட்டுச்சென்றார் . ஞான திருஷ்டியிலும் விடை விளங்காமல் பாம்பு கடித்து இறந்த மன்னன் உடலில் கூடு விட்டுக்கூடு பாய்ந்து அரசனாகிறார் .பின் அந்த ஒரு நாள் அரண்மணையில் அரசியுடன் இருந்துவிட்டு வருகிறார். மறுநாள் அதனின் விடையை சரியாக அளித்தார் சங்கரர் . போட்டியில் தோற்றவர் துறவரம் மேற்கொண்டு சங்கரர் வழியை பின்பற்றினார். இந்த பாரதி சாட்சாத் சரஸ்வதியே என்றும் சிருங்கேரியில் இருக்கும் சாரதாம்பாளும் இவளே என்று ஒரு சிருங்கேரி பக்தர் என்னிடம் கூறினார்
சங்கரரும் உலகத்தை உய்விக்க வந்த ஒருஜகத் குருவாக ஆவார் என்று ஜோசியம் கூறியது அதேபோல ஒரு நாள் அவர் நதியில் குளிக்கபோக ஒரு முதலை அவர் காலை கவ்வி உடும்பு பிடியாகப் பிடித்துக்கொண்டது இல்லற பந்தங்களை விட்டு சன்யாசியாக மாற அவர் ஒப்பத்துக்கொண்டால் அந்த முதலை தன் பிடியிலிருந்து விட்டுவிடும் எனச்சொல்லவும் செய்தது. .தன் தாயாரை ரொம்பவும் தேற்றிவிட்டு இவரும் சன்யாசி ஆகிவிட்டார்.
சித்தார்த்தரும் முதலில் ஒரு தொண்டு கிழவர் ஒருவர் தள்ளாடித்தள்ளாடிபோனதைக்கண்டு “வாழ்க்கை இதுதானா ? இதிலிருந்து விடுதலை கிடைக்க வழியில்லையா ?”என்று யோசிக்க ஆரம்பித்தார் .அதன் பின் ஒரு சவ ஊர்வலம், .ஒரு நோயாளி என்றும் பார்த்ததை நாம் அறிவோம் .
இதேபோல் ஆதிசங்கரருக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. இந்த அனுபவத்தால்தான் நமக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது
அதுவே மோஹமுத்கரம் .அதாவது மோஹத்தை உடைத்தெறியும் சம்மட்டி .மோஹமுத்கரத்தின் முதல் பாடல் தான் நம்மில் பலருக்கும் தெரிந்த “பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே “{இந்தப்பாடலை நினைத்தவுடனேயே என் கண்முன் வருவது திருமதி எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்கள் தான் .
பஜகோவிந்தம் உருவான இடம் காசி மாநகரம். நதிகளிலேயே மிகச்சிறப்பு பெற்ற புனித கங்கை நதி தீரத்தில் தனது புனித பாதங்களை பதித்தபடி ஞானப்பழமாக கங்கைப்பிரவாகம் போல் .ஞானப்பிரவாகமாக நடந்து வருகிறார் ஸ்ரீஆதிசங்கரர் .தனது முப்பதிரண்டாவது வயதிலேயே ஒரு தத்துவ ஞானியாக அத்வைத்த தத்துவத்தை ஸ்தாபித்து பாரதம் முழுவதும் தனது திருப்பாதங்களால் புனிதப்படுத்திய அவதார புருஷர் கங்கைத்தீரத்தில் சிவப்பழமாக நடந்து வருகிறார் ,கூடவே நான்கு சீடர்களும் தொடருகின்றனர் .
ஜயஜய சங்கரா ஹரஹர சங்கரா என்ற கோஷமும் கிளம்பி பின் மெள்ள தென்றலில் மிதந்து கங்கை நதியில் கலக்கிறது.
அந்த கங்கை பளிங்குப்போல் சலசலவென ஒட சூரியோதயம் போல் அங்கு சங்கரர் வருகிறார் . அந்த நேரம் ஒரு பண்டித கிழவர் கையில் கோலுடன் தள்ளாடித்தள்ளாடி வருகிறார் .அவர் கையில் ஒரு சுவடி. அதைப்பார்த்துப்பார்த்து எதையோ மனப்பாடம் செய்ய அது மனதில் ஏறாமல் கிழவர் தவிக்கிறார்.அவர் சுவடியில் படித்ததோ சிலஇலக்கண நியமங்கள் .இதைப் பார்த்து ஜகத்குரு அவர் அருகில் செல்கிறார் இன்றோ நாளையோ என்பது போன்ற உடல் ….காலன் எந்தநேரமும் வரலாம் .இந்த நேரத்தில் இலக்கண சூத்திரம், படித்து மண்டையை உடைத்துக் கொள்கிறானே.! ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்கிறார்.
.” என்ன உலகம் இது? ஒரு இடம் பொன் மேல் மோகம் .ஒரு இடம் வெறும் சதையும் எலும்பும் ஆன உடலின் மோகம் ,பெண் மேல் காமம் , மனைவி ,மக்கள் என்ற. பந்தவலையில் விழுந்து நான் , எனது என்ற அஹங்காரத்துடன் அந்த இறைவனை நினைக்காமல் காலத்தை வீண் செய்கிறதே!”
அவரது எண்ணங்களின் ஓட்டம் “பஜகோவிந்தமாகப் பிறக்கிறது
கோவிந்தனை பஜிப்பாய் ,,கோவிந்தனை பஜிப்பாய்
ஏ மூடமனமே
நீ மாயுங்காலம் அந்தகோவிந்தனன்றி வேறு யார் ரட்சிப்பார் ‘ என்ற
பொருளில் ஆரம்பித்து மேலே பல மலர்கள் உதிர்ந்து பூமாலையாகிறது .
வாழ்க்கை நிலையற்றது ,ஆடி ஒடி பணம் ஈட்டும் நேரம் தான் நம்முடன் உற்றார் உறவினர்கள், ஜனனம் மரணம் தொடர்தல் ,
பிரும்மத்தை அறிய நேரமினமை .இளமங்கை சதை பிண்டம் மேல் மோகம் என்று பல பூக்கள் அந்த மாலையில் தொடுக்கப்பட்டிருக்கிறது
புத்தரது எட்டு வழிகளான நல்ல பார்வை, நல்லெண்ணம் இனிய பேச்சு நற்செய்கை நல்ல வாழ்க்கை நன்முயற்சி ,நல்ல மனசாட்சி நல்ல தியானம் { right view ,right intention ,rt speech ,rt பல action rt lively hood rt effort rt mindfulness rt concentration }
இவைகள் இந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்து வர சங்கரரும் இதை பல இடங்களில் கூறியிருக்கிறார் .
பிரும்மம் உணர ஆசையான மண்ணாசை ,பொன்னாசை ,பெண்ணாசை மூன்றையும் அறவே துறக்கவேண்டும் என்று இருவருமே சொல்லியிருக்கின்றனர் .இன்பம் துன்பம் இரண்டையுமே சமமாக எடுத்துக்கொண்டால் தான் நிம்மதி பெறமுடியும் என்றும் இருவருமே சொல்கின்றனர்
இருவருமே துறவறத்தை ஆதரித்து பிரும்மனைக் காண்கின்றனர்
இதேபோல் பல ஒற்றுமைகளை புத்தர் ,சங்கரர் இருவரிடத்திலும் என்னால் காணமுடிந்தது .
ஒம் ஜயஜய சங்கர ஹரஹரசங்கர ,,,,,,,புத்தம் சரணம் கச்சாமி ….
படத்திற்கு நன்றி :
http://pinterest.com/pin/112519690661213331/
ஆதி சங்கரரது கதைக்கும், புத்தரின் கதைக்கும் மாத்திரம்தான் ஒற்றுமை உள்ளன என்பதற்கில்லை. யேசு மரியாளில் உருவாகிய விதம், யேசு பிறந்த சூழல், அவர் ஞானம் பெற முற்பட்டமை, யோன் இன் தன்மைகள், யோன் யேசுவுக்கு ஞானத்தானம் கொடுத்தமை, யேசு பின்னர் விரதமிருந்தமை, ஞானம் பெற்றமை, யேசு போதனை செய்தமை, அவரைப் பலர் நிராகரித்தமை, சீடர்களை உருவாக்கியமை, யேசு மலைப்பிரசங்கம் செய்தமை, யேசுவின் கடைசி உணவு, யேசு இரு முனைப்புக் குணமுடையவர்களுக்கு நடுவாகச் சிலுவையில் அறையப்பட்டமை, அதாவது நடுவுப்பாதை வலியுறுத்தப்பட்டமை, என்பவையெல்லாம் புத்தபெருமானின் கதையுடனும்,புத்தரின் போதனையுடனும் ஒன்றுகின்றன.
இவை மாத்திரமல்ல. சிவன், விச்ணு, கந்தன், பிள்ளையார் என்ற கடவுள்களின் உருவாக்கத்தினையும், அவைகளின் தன்மைகள், அவைகள் வலியுறுத்துபவைகள் என்பவைகளை ஆராய்ந்தால், அவை யாவும் புத்தபெருமானினதும், அவரது போதனையினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்டதை ஆதாரபுர்வமாக அறியமுடியும். உதாரணமாக. விச்ணுவை எடுங்கள். அவர் சங்கு, சுட்டிவிரலால் சுழற்றப்படும் சக்கரம், நெற்றியில் நாமம் அடையாளம் என்பவைகளுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவைகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் விச்ணுவை எதனுடன் அடையாளப்படுத்துகின்றன? இதற்கு விஞ்ஞான ரீதியிலான விடைகள் இன்றுவரை கொடுக்கப்படவே இல்லை. சங்கு ஆனது ஒருவரால் ஒலியெழுப்பபக் கூடிய சாதனம் ஆகும். இந்த ஒலியானது சுற்றத்திலுள்ள அனைவராலும், எந்தவித பாகுபாடின்றிக் கேட்கப்படமுடியும். ஆகவே சங்கு ஆனது, சகலருக்குமான அறிவிப்பினை, அல்லது சகலருக்குமான போதனை செய்யப்படுவதைத்தான் அடையாளப்படுத்தமுடியும். இந்தநிலையில், என்ன விச்ணுவால் அறியக்கொடுக்கப்படுகிறது, அல்லது போதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையை விச்ணுவின் வலது சுட்டு விரலால் சுழற்றப்படும் சக்கரம் தருகிறது! வரலால் சுழற்றப்படும் சக்கரத்தின் தன்மையானது நடுவுப்பாதையாகும். அதாவது, the Middle Path ஆகும். ஆகவே, விச்ணு என்ற கடவுள் நடவுப் பாதையைச் சகலருக்கும் போதனை செய்பவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்! ஆனால், எந்தவொரு பிற போதனைகளிலும் குறிப்பாகக் கூறப்படாதபோதும், பௌத்த போதனையில்தான் நடுவுப்பாதையானது குறிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. நடுவுப்பாதைதான் பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும், பௌத்த அறம் ஆகும்! பௌத்த்தின் நடுவுப்பாதையை நிர்ணயிப்பது,பௌத்த ‘எண்குணங்கள்‘ (the Noble Eight fold Path)ஆகும்.இந்தநிலையில், விச்ணு என்ற கடவுள் பௌத்த அறத்தினைப் போதிப்பவராகின்றார். மேலும், விச்ணுவின் நெற்றியில், மூக்கிற்கு மேலாக ‘நாமம்‘ அடையாளம் இடப்பட்டுள்ளது. இந்த அடையாளமும் நடுவுப்பாதையை அடையாளப்படுத்தும். ஆகவே, நெற்றியில் இடப்பட்டுள்ள இந்த அடையாளமானது விச்ணு என்பவர் நடுவுப்பாதைக் கடைப்பிடித்தவர் என்பதை அடையாளப்படுத்தகிறது. இந்த நிலையில், விச்ணு என்ற கடவுள் புத்தபெருமானதும், அவரது போதனையினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுளாகும். இதனால்தான் இலங்கையின் பௌத்த கோயில்கள் பலவற்றில் விச்ணு சிலைகள் காணப்படுகின்றன! இதை விளங்காத சிங்கள தேரவாத பௌத்தர்கள், இது தமிழர்களின் மேலாதிக்கம் என்பர்! இதைப்போலவே, சிவனின் கையிலுள்ள ‘உடுக்கு‘ போதனை செய்வதை அடையாளப்படுத்துகிறது. என்னவிடயத்தினைச் சிவன் போதிக்கிறார் என்பது, அவரின் ஒரு கையில் உள்ள ‘திரிசூலம்‘ என்பதூடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எல்லோரும் ‘திரிசூலம்‘ என அதைக் கூறும்போதும், அதன் இரண்டு வெளிப்புறப் பாகங்கள் எதிர்த்திசைகளை நோக்கியவாறே உள்ளன. இந்தநிலையில், நடுவில் இருப்பது நேராக இருக்கும் நிலையில், இந்த மூன்று பகுதிகளும் இணைந்து, நடுவுப்பாதையைத்தான் அடையாளப்படுத்துகின்றன. ஆகவே, சிவனும் பௌத்தம் வலியுறுத்தும் நடுவுப்பாதையைத்தான் போதிப்பவராகிறார். இதைவிட, சிவனின் கையொன்றில் எரியும் நெருப்புக் காணப்படுகிறது. இது ஒளிமயமான தன்மையை அடையாளப்படுத்தும்.இந்த நிலையில், இவை மூன்றும் இணைந்து, “சிவன்” ஒளிமயமான நிலையை உருவாக்கும் “நடுவுப்பாதை”யைப் போதிப்பவன் ஆக்குகின்றன! இவற்றைவிட, சிவனின் நெற்றியில் ‘முக்குறி‘ (the Triple Stripe) காணப்படுகிறது. இதன் தன்மையும் நடுவுப்பாதைதான்! ஆகவே, ‘சிவன்‘ நடுவுப்பாதையைக் கடைப்பிடிப்பவன் ஆகின்றான். ஆகவே, ‘சிவன்‘ என்ற கடவுளும், புத்தபெருமானதும், அவரது போதனையினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள்ளகள் ஆகும். இதை ‘சிவன்‘ என்ற சொல்லின் பொருள்களுடாக மொழியியல் ரீதியாகவும் உறுதிப்படுத்த முடியும். ஆனால், இங்கு தமிழ் மொழியின் ‘மொழிப்பொருட் காரணத்தை‘ விஞ்ஞான ரீதியாக விளங்கியிருக்கவேண்டும். “சிவன்” என்பது ‘சிவ் + அன்‘ ஆகும். அதாவது “சிவ் தன்மையானவன்” ஆகும். ‘சிவ்‘ தன்மை என்ன? இதையறிய நாம் “சிவ்” என்ற இணையொலியின் மூலத்தனியொலிகள் தன்மையடிப்படையில் செய்யும் விபரிப்புக்களை ஆராய்ந்து அறிந்திருக்கவேண்டும். அப்படி ஆராய்ந்தறிந்தால்: ‘சிவ்‘ (ச் + இ + உ) என்ற இணையொலியானது: “மேன்மை(ச்) நிறைவு(இ) உயிர்ப்பு(உ) தன்மை” என்பதை அறியமுடியும். ஆகவே, ‘சிவன்‘ என்பது “மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மையானவன்” எனப் பொருள்படும். ” மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை “யை நாம் அன்பு, அருள், அறம், அறிவு, இன்பம், ஒளி, அழகு, இனிமை, செம்மை, எனப் பலவற்றில் அடையாளம் காண முடியும். ஆகவே, ‘சிவன்‘ என்பது அன்புமயமானவன், அருள் மயமானவன், அறமயமானவன், அறிவன், இன்பமயமானவன், இனியன், செம்மையானவன்,அழகன்,ஒளிமயமானவன், … எனவெல்லாம் வரும். இவைகள் அனைத்தும் புத்தபெருமானுக்கும் பொருந்தும். இதை ‘வீரசோழியம்‘ உரை நூல், ஏனையவைகளுடாக உறுதிப்படுத்த முடியும்! இதனாலேதான், இலங்கையில் புத்தபெருமான் தனது பாதப்பதிப்பினைச் செய்ய மலையை, தமிழில் ‘சிவன் ஒளிபாத மலை‘ என்பர்!! இந்தநிலையில், சிவன், விச்ணு, கந்தன், விநாயகன்,… என்பவைக்ள எல்லாம் புத்தபெருமானதும், அவரது போதனையினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள்களாகும்.இதை இந்திய, இலங்கைத் தொல்பொருட்களுடாகவும் உறுதிப்படுத்தமுடியும். இங்கு அவதானிக்கவேண்டியது என்னவெனில், இவைகள் தேரவாத பௌத்தர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. இவைகள் தமிழ்டி மஹாயாண பௌத்தர்களால் உருவாக்கப்பட்டவை! தேரவாத பௌத்தம் அடையாளப்படுத்துகையையும், புத்தபெருமானையும், பௌத்தத்தினையும் அடையாளப்படுத்துவதையும் முழுமையாக நிராகரிக்கிறது. அடையாளப்படுத்துகையை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து விளங்கிக்கொள்ளாவிடின், தமிழ் மொழியையும் சரியாக அறியமுடியாது, சைவம், வைணவம் என்பவைகளையும் சரியாக விளங்கமுடியாது. ஆனால், இவைகள் பற்றி, கற்பனை அடிப்படையில் மர்மக் கதைகளை எழுதப்படமுடியும்!
அன்பு உதயகுமார் ஜி உங்கள் கட்டுரை மூலம் பல விஷயங்க்=ள் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி
Dear rvishalam andothers!
If you want to study about symbolization, symbolization of Buddha and Buddhism etc. and other things. please go to the free web sites http://www.tamilsociety.net, http://www.tamilresearchandnews.net and http://www.facebook.com/uthayakumara .
திருமதி விசாலம்: உங்கள் அலசல் சுவையாக இருக்கிறது. சில கருத்துக்கள்: இறையாண்மை சமயங்களின் படி நிலைக்கு மேலே. ஆன்மீக அலைச்சல்களும் அவ்வாறே. அதனால், சர்வமத சம்மதம் தென்படுகிறது, திரு. அ.சி. உதயகுமார் சுட்டியது போல. நானும் மைதிலி சரண் குப்தாஜியின் கவிதைக்குரலில் சொன்னது போல, ‘தோழி! அவர் என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தால்… (sakhi vE mujhsE keh kar jaatE…) யசோதரா கட்சி. ஆதி சங்கரர் எவ்வளவோ தேவலை. ஒரு தடவை கூடு விட்டு கூடு பாய்ந்தார். (கையையும் சுட்டுக்கொண்டார்: மம தேஹி கராவலம்பம்.) காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் தான் சித்தார்த்தர் மனைவியிடம் சொல்லாமல் விலகினாரோ?
திரு. உதயகுமார்: விஷ்ணுச்சக்கரத்திற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் கிடைக்காது; தேவையும் இல்லை. ஆன்மீக விளக்கம் கூட சுற்றி வளைத்து அமையலாம். தெய்வ வழிபாடு ஒரு அற்புதமான படி நிலை. ராஜாஜி பஜகோவிந்தத்தை பற்றி சொன்னதை போல, ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல. கல்வி ஞானத்தை அளிக்கக்கூடும். அந்த ஞானம் கூட பக்தியில் சரண் புகாவிடில், அது முற்றுப்பெறாதது தான்.
திருமதி விசாலம்: உங்கள் அலசல் சுவையாக இருக்கிறது. சில கருத்துக்கள்: இறையாண்மை சமயங்களின் படி நிலைக்கு மேலே. ஆன்மீக அலைச்சல்களும் அவ்வாறே. அதனால், சர்வமத சம்மதம் தென்படுகிறது, திரு. அ.சி. உதயகுமார் சுட்டியது போல. நானும் மைதிலி சரண் குப்தாஜியின் கவிதைக்குரலில் சொன்னது போல, ‘தோழி! அவர் என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தால்… (sakhi vE mujhsE keh kar jaatE…) யசோதரா கட்சி. ஆதி சங்கரர் எவ்வளவோ தேவலை. ஒரு தடவை கூடு விட்டு கூடு பாய்ந்தார். (கையையும் சுட்டுக்கொண்டார்: மம தேஹி கராவலம்பம்.) காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் தான் சித்தார்த்தர் மனைவியிடம் சொல்லாமல் விலகினாரோ?
திரு. உதயகுமார்: விஷ்ணுச்சக்கரத்திற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் கிடைக்காது; தேவையும் இல்லை. ஆன்மீக விளக்கம் கூட சுற்றி வளைத்து அமையலாம். தெய்வ வழிபாடு ஒரு அற்புதமான படி நிலை. ராஜாஜி பஜகோவிந்தத்தை பற்றி சொன்னதை போல, ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல. கல்வி ஞானத்தை அளிக்கக்கூடும். அந்த ஞானம் கூட பக்தியில் சரண் புகாவிடில், அது முற்றுப்பெறாதது தான்.
அன்பு இன்னம்பூரான் படித்து நல்ல கருத்துக்களையும் சொன்னதற்கு மிக்க நன்றி .
என் சாஹித்ய ரத்னா கோர்ஸில் யசோதராவும் சாகேதும் முக்கிய பங்கு வகித்ததால்
இன்றும் அவற்றில் சில ஞாபகம் இருக்கிறது . யசோதராவும் சாகேத்தின் ஊர்மிளையும் என் மனதில் அடிக்கடி வருவார்கள்