காதல் கொடி!
பாகம்பிரியாள்
நம் காதல் மலையைப்போல்,
மௌனமாகவே இருக்கிறது
என்றே நீ அங்கலாய்த்தாய்.
அதற்கு அருகில் நீ சென்றதுண்டா?
துள்ளியோடும் மானைப் போல்,
நினைவுகள் அங்கும் இங்கும்
ஓடிக் கொண்டேயிருக்கும்
நீ வரும் வழி பார்த்தே!
நம் கோபம் போல், சில நினைவுகள்
இறுகிக்கிடக்கும் கரும் பாறையாய்.
சில இடங்களிலோ புதிதான நிறத்தில்,
பச்சைப்பாசி படர்ந்திருக்கும் மெலிதாய்!
சொல்லத் தெரியாத சோகம் போல், பெயர்
தெரியாத பறவைகள் புலம்பிக் கொண்டிருக்கும்.
இளங் கொடிகள் கட்டுண்டு கிடந்தாலும்,
அவ்வப்போது புதிய இலைகள் தலை காட்டும்.
அன்பை ஏற்கிறேன் என்று நீ சொன்ன செய்தி
வந்தவுடனே , சந்தோஷம் எங்கும் பற்றிக் கொண்டு,
குல்மொகர் பூக்களைக் கட்டி காதல், தன் கொடியை ஏற்றிவிடும்
காடெங்கும் கண்ணை பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில்!
படத்திற்கு நன்றி
http://blogs.gonomad.com/traveltalesfromindia/2012/05/gulmohar-flowers.html
காதலை ஏற்றுக்கொண்டவுடன் காதல் கொண்ட கொண்ட மனது விரிக்கும் கற்பனை இருக்கிறதே , அது சொல்லிமாளாது .
இந்தக்கவிதையில் குல்மோகர் பூக்களை உதாரணம் காட்டி வந்திருக்கும் வரிகளைப் பார்த்தால் ,காதலின் நிறமே ஆரஞ்சுதானோ என எண்ணத்தோன்றுகிறது .சபாஷ்.
நிறமேறிய காதலுக்கு மேலும்
உரம் சேர்க்கும் பாராட்டினைத் தந்த
தனுசு அவர்களுக்கு நன்றி
புதுக்காதலில் நல்ல
புன்னகைப் பூக்கோலம்…!
_செண்பக ஜெகதீசன்…
இக்காலத்துக் கவிதையிலும் தற்குரிப்பேற்று அணி அழகு செய்கிறது.
ஏதோ பூ பூக்குதுன்னு நினைக்கக்கூடாது, அது ஆதலின் வெற்றிக் கொடியாக்கும்:)))
பூக்கோலம் என்று பாராட்டுக் கோலம் தந்த திரு செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி
கவிதைக்கு ஆச்சரியக்குறி மூலம் பாராட்டுத் தந்த தேமொழி அவர்களுக்கு நன்றி