எதில் இருக்கிறது அரசியல்..?
யுகநிதி, மேட்டுப்பாளையம்
நிலவைக்காட்டி
மக்களுக்கு
சோறூட்டுவதிலா..?
எதார்த்தத்தின் மீது
மணற்கோட்டை
கட்டித் தருவதிலா..?
ஒருநேர
பசிபோக்கி அவன்
உரிமையைக்
களவாடுவதிலா..?
தேன் தடவிய
வார்த்தைகளால்
மதிமயக்கம்
கொள்ள வைப்பதிலா..?
கடுஞ்சொற்களால்
ஒருவர்
முகத்தில் ஒருவர்
அசிங்கத்தைப்
பூசிக்கொள்வதிலா..?
மக்கள் சேவை
எனும் பெயரால்
ஆட்சியைப் பிடித்து
ராஜ வாழ்க்கையை
அனுபவிப்பதிலா..?
எதில் இருக்கிறது
அரசியல்..?
காணி நிலம்கூட
இல்லாமல்
கக்கனும் காமராசும்
மண்ணை ஆண்டுவிட்டுப்
போய்விட்டார்கள்
நல்ல அரசியலையும்
எடுத்துக்கொண்டு..!
இவர்கள் போல்
பசியறிந்த ஒருவர்
மக்கள் பசிபோக்க
வரும்நாள் எந்நாளோ..?
எனக்கு பிடித்துப் போய்விட்டது. சுருக்கமான விடைகள்:
1. நிலவைக் காட்டி, குழந்தைகளுக்கு உருண்டைச் சாதம் ஊட்டுவது உண்டு. அரசியலர் நிலவையே ஊட்டுவார், வாய் ஜாலத்தால். அது பசிப் பிணியை போக்காது.
2. யதார்த்தத்தின் மீது மணற்கோட்டை கட்டுவது அரசியலருக்குக் கைவந்த கலை. கலைந்த மண்ணையும் அள்ளிச் செல்வர்.
3. ஒரு நேர ப்பசியை போக்குவது எல்லாம் கிடையாது. அது ஒரு பாவ்லா. பிரசாரம். சிலருக்கு பஞ்சப் பட்சப் பரிமாறுதல்; பலருக்கு நீராகாரம்.
4. வார்த்தைகளில் எப்போதும் வேதியியல் தேன்; கசக்கும். ஆனால் காலம் கடந்து.
5. கடுஞ்சொற்க்கள் இலவசம்!
6. மக்கள் சேவை என்று சொல்லிக்க்கொள்வதையும் நிறுத்தி விட்டார்கள்.
7. பசியறிந்தவர் ஆட்சிக்கு வருமுன், குதிர் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்.
kavidhai pakkathil idhai veliyitturikka vendaam.