மறைந்தும் மறையாத மலர்மன்னன்

ஜோதிர்லதா கிரிஜா

எழுத்துலகத்து விடிவெள்ளியொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளிலிருந்து.புலனாகும்.  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆணம்க்களே காரணம்’ என்று.  .’அந்நோயினால் பாதிக்கப்ப்ட்டுச் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் என்னை அப்பா என்று அழைக்கும் போது என்க்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது, தெரியுமா?’  என்று உரிய நியாயத்துடன் தாம் எனக்கு எழுதிய கடிதத்தில் பெருமிதப் பட்டுக்கொண்டார். சீரியசிந்தனையும், சமுதாய் உணர்வும். மகாகவி பாரதியார் மீது ஆழ்ந்த பக்தியும். தனிச்சிறப்புக் கொண்ட் எழுத்துத் திறனும் வாய்க்கப்பெற்றிருந்த மனிதாபிமானி மலர்மன்னனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையன்று. அவரது மறைவு நெஞ்சில் ஒரு பள்ளம் விழுந்த உணர்வை உண்டாக்கியது

3 thoughts on “மறைந்தும் மறையாத மலர்மன்னன்

 1. அற்றைத் திங்கள் அன்றைய திண்ணையில் இறுதி

  அஞ்சலி செய்தார் நமது விடுதலைப் பிதாவுக்கு ! இற்றைத் திங்கள் இவ்வாரத் திண்ணையில் மன்னர்க்கு இரங்கல் பாக்கள் ! அந்த மலரும் இல்லையே !

 2. அன்பின் கிரிஜாம்மா,

  இந்த மாதம் “அமுத சுரபியில்” இப்படியும் ஒரு அப்பா என்ற தலைப்பில் தங்களது கட்டுரையைப் படித்தேன். பதில் எழுத வேண்டும் என்று எண்ணிய வேளையில். அதற்கு முன் பக்கத்தில் திரு.மலர்மன்னன் அவர்களின் சிறுகதையைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 

  ஒரு எழுத்தாளர் தனது இறுதி மூச்சு வரைக்கும் எழுத்தாளரார்  என்ற அதே அங்கீகாரத்துடன் இருப்பது அனைவருக்கும் கைவல்யம் ஆகாது.

  மனிதர் மலர்மன்னன் அவர்கள் நட்சத்திரமாக உயிர் பெற்ற செய்தி அறிந்ததும் மௌனமாய் வான் நோக்கிய பலரில் நானும் ஒருத்தி.
  ஒரு சீரிய சிந்தனையாளர்…தனது இறுதி நேரம் வரையிலும் தனது சிந்தனைத் துளிகளை அச்சேற்றி அதில் கூட பூடகமாக பல விஷயங்களைப் புரிந்து கொள்ளுமாறு எழுதி வைத்துப் போனது போலிருந்தது.
  ஆத்மீகமாக அவர் எழுதிய “தீர்வு”என்ற சிறுகதை…இந்த மாதம் பிப்ரவரி 2012 – அமுத சுரபி யில் வெளி வந்திருக்கிறது. அதைப் படித்ததும் தான் இறுதியாக உறுதியாக அனைவர்க்கும் எதை “கீதையாக”ச் சொல்ல வேண்டுமோ..அதை அப்படியே எழுதி இருப்பது போலத்  தெரிந்தது.

  ஒவ்வொரு வரியிலும்….அவர் நமக்கு சொல்வது போலவே வாழ்வின் தத்துவத்தை எழுதி வைத்தார் கதையில்.
  ////”அப்போ நா வரட்டா..” என்றபடி எழுந்து கொண்டேன்…../////”இந்த வரி இப்போது ஒரு உண்மையைப்  பேசுகிறது.
  “எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது..” என்று சிரித்தபடியே கதையில் வாசகர் அனைவரிடமிருந்தும் விடை பெற்றது  போலிருந்தது. 

  சிலருக்குத் தான் வாய்க்கும் இது போன்ற சந்தர்ப்பம். அது அவருக்குக் கிடைத்திருக்கிறது ஒரு எழுத்தாளராக இருந்ததால் மட்டுமே கிடைத்த வரப்ரசாதம். அவரது இறுதியான “தீர்வு” இது தான் என்று சொல்வது போலிருந்தது கதை. 

  அன்புடன் 

  ஜெயஸ்ரீ ஷங்கர் .

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க