Featuredஇலக்கியம்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…. (45)

சக்தி சக்திதாசன்

 

 

 

 

அன்பினியவர்களே !

உலகம் இன்று ஒரு சிறிய பந்தாகி விட்டது . எப்படி என்கிறீர்களா? நாட்டுக்கு நாடு பறப்பது என்பது மிகவும் சுலபமான ஒரு விடயமாகி விட்டது. கடல் கடந்து சீமை செல்கிறோம் எனும் ஒரு நிலைமாறி ” இதோ நாளை காலை அங்கு வந்து விடுகிறேன் ” என்று மிகவும் நம்பிக்கையுடன் ஆயிரம் மைல்களுகளுக்கப்பால் இருப்பவர்களுக்கு கூறக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

வாழ்க்கை முறையிலும் சரி, வியாபார விடயங்களிலும் சரி இலகப்பொருளாதாரம் ஒன்றுடன் ஒன்ரு பின்னிப்பிணைந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

இத்தகிய ஒரு காலகட்டத்திலே தான் இன்று இங்கிலாந்து நாட்டின் மக்கள் முன்னே ஒரு பெரிய விவாதம் தலைதூக்கியுள்ளது.

ஜரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியத்தின் பங்கு பற்றிய விவாதமே அது. ஜரோப்பிய பாராளுமன்றத்தினால் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் மீது விதிக்கப்படும் விதிமுறைகளுக்கு இன்று இங்கிலாந்தில் கடுமையான எதிர்ப்பு ஒரு பக்கத்தில் இருந்து கிளம்பியுள்ளது.

இது ஏதோ இப்போதுதான் புதிதாக கிளம்பியுள்ள ஒரு பிரச்சனை அல்ல. நீறுபூத்த நெருப்பு போல பலகாலமாக அனைத்து அரசியல் கட்ச்சிகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களிடையே உள்ள ஒரு பகுதியினரின் மனதில் நிலவு வந்த அபிப்பிராயமே அதுவாகும்.

காலத்துக்குக் காலம் தேர்தல் சமயங்களில் அடிக்கடி வெளிக்கொண்டு வரப்படும் இப்பிரச்சனையினால் அதிகம் பாதிக்கப்படும் அரசியல் கட்ச்சி தற்போதைய இங்கிலாந்து கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான் கட்சியான கன்சர்வேடிவ் கட்ச்சியினருக்கே ஆகும்.

கன்சர்வேடிவ் கட்சி அதன் பெரைக் கொண்டே கூறிவிடக்கூடிய பழைய மரபுகளைக் கட்டிக்காக்கும் ஒரு கட்சியாகும். இக்கட்ச்சியில் இருக்கும் பலர் தமது பழைய பிரித்தானிய பேரரசின் ஏகாதிபத்திய அபிலாஷைகளை மனதில் தக்க வைத்துக் கொண்டுள்ளவர்களாகும்.

அதற்காக ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து வகிக்கும் பங்கு குறித்து இவர்கள் கூரும் எதிரான கருத்துக்களில் உண்மை இல்லாமலில்லை.

ஜரோப்பிய ஒன்றியம் போடும் பல சட்டங்கள் பிரித்தானிய நாட்டின் அரசியல் சட்டங்களில் தலியிடுவதாக அமைந்துள்ளது அரசுக்கு ஒரு பெரும் தலையிடியாகவுள்ளது.

குறிப்பாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு அகைது செய்யப்பட்டு நாடுகடத்த முயற்ச்சி செய்யும் போது அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைச் சட்டங்களை உபயோகித்து தமது நாடு காடத்தலைலிருந்து பலகாலமாக தப்பித்துக் கொண்டு வருவது மக்களிடையே மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி ஜரோப்பிய ஒன்ரியத்தில் புதிதாக இணைந்துள்ள கிழகு ஜரோப்பிய நாடுகளின் பிரஜைகள் இலகுவாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து இந்நாட்டின் அரச உதவிப்பணத்தை இலகுவாகப் பெறுகிறார்கள் என்பதும், இத்தகிய நடவடிக்கைகள் இந்நாடு பொருளாதாரச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் வேளையில் நடைபெறுகிறது என்பதும் மேலும் மக்களின் மனதில் பல எதிரான உணர்வலைகளுக்கு வித்திடுகின்றன.

நாளொன்றுக்கு ஜரோப்பிய ஒன்றியத்துக்கான பிரித்தானிய நாட்டின் செலவு ஏறத்தாழ 50 பில்லியன் பவுண்ஸ் என்பது மக்களுக்கு முகிந்த எரிச்சலை உண்டு பண்ணி வருகிறது.

ஆனால் அதே சமயம் பிரித்தானிய ஒன்ரியத்தில் அங்கம் வகிப்பதனால் இங்கிலாந்து நன்மை அடையாமலுமில்லை. கண்க்கெடுப்புகளின் படி ஏறத்தாழ 30 சதவீததத்திர்கு அதிகமான இங்கிலாந்தின் ஏற்றுமதி இவ்ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தின் உதவியினாலேயே நடக்கிறது என்று கூறப்படுகிறது.

அத்தோடு இங்கிலாந்தில் குற்றச்செயல்களைப் புரிந்து விட்டு ஏனைய ஜரோப்பிய நாடுக\ளில் மரைந்து வாழ்ந்து வந்த பல குற்றவாளிகள் ஜரோப்பிய அங்கத்துவத்தினால் கிடைத்த ஒத்துழைப்பினால் கைது செய்யப்படுளார்கள் எனப்தும் உண்மை.

பல பெரிய இங்கிலாந்து நிறுவனங்களின் முகவர்கள் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் முன்னிலை வகிப்பதனால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தலாம் என்று றிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அதேசமயம் ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தினால் வளரும் பொருளாதாரங்களான சீனா, இந்தியா ஆகியவற்ருடன் இங்கிலாந்து ஏற்படுத்தக்கூடிய கூட்டுறவுகள் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் இதற்கு எதிரானவர்கள்.

ஜரோப்பிய அங்கத்துவத்திற்கு எதிரானவர்கள் எனும் கொள்கை ஒன்றின் அடிப்படியில் அமைந்த “ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி” மக்களின் கருத்துக் கணிப்பில் ஆதரவு பெர்று வருகிறது. இவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு கன்சர்வேடிவ் கட்ச்சியின் அங்கத்தவர்களில் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவர்களினாலேயே பெருகுகிறது என்பது பெரும்பான்மையான அரசியல் அவதானிகளின் கருத்து.

இதனால் ஜரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மீள்பரிசோதனை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை கன்சர்வேடிவ் கட்ச்சியில் வலுவடைந்து பிரதமர் டேவிட் கமரனுக்கு தலியிடியைக் கொடுத்து வருகிறது.

அவரது கூட்டரசாங்கத்தின் அடுத்த கட்ச்சியான லிபரல் டெமகிரட்ஸ் முற்றுமுழுதாக ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை ஆதரிக்கிறார்கள்.

இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்ரியத்துடனான ஊரவை வலுப்படுத்த வேண்டுமேயன்றி வழுவிழக்கச் செய்யக்கூடாது என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில் அடுத்தவாரம் இது பற்றிய தனது கருத்தை வெளியிடப்போகும் பிரதமர் டேவிட் கமரன் அவர்களி உரையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வெறும் வாய்களுக்கு கிடைக்குமா அவல் ?

பொறுத்திருந்து பார்ப்போம்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க