அறுபடை ஆண்டோன் துதி

 

சத்தியமணி

 

ஒமெனும் பிரணவ மகிமையைத் தந்தைக்கு
உணர்த்திய சுவாமிநாதா
தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
மலையாளும் பழனிபாலா
நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
அலைவாழும் வெற்றிவேலா
பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
தலைவனாய் தணிகைமேலா

நித்திலம் துதிபாட மதுரைதிருபரங்
குன்றேறி குளிர்ந்தகுமரா
முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
பழஞ்சோலை வாழும்முருகா
புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
வித்தையைத் தந்தகுருவே
சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
நித்தமென் நாவிலருளே

 

படங்களுக்கு நன்றி:

http://www.tiruchendurmurugan.com/etemple3.html

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அறுபடை ஆண்டோன் துதி

  1. படைக்கிரு வரி எனப் படைத்த அழகான கவிதை.

  2. நாமெனும் அகபத்ம சூரர்பகையழித்தோனுக்கு
    நல்ல துதி…!
    -செண்பக ஜெகதீசன்…!

Leave a Reply

Your email address will not be published.