நீர் உமிழ்ந்த நீரின் தாகம்…
அருண் காந்தி
மலையை உடைத்து
மண்ணைப் படைத்து
மரங்களைப் படைத்து
மனிதனை நனைத்து
கழனிகள் நிறைத்து
காடுகள் கடந்து
கடலை அடைந்த நீர்
தாகத்தில் கடலையே
குடிக்க நினைத்து
உள்வாங்குகிறது.
முடியாமல் தோல்வியில்
உமிழ, உமிழ்ந்த நீர்
ஊரையே குடிக்கிறது…
============================================
படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Tsunami