பூக்களுதிர் காலம்
வருணன்
நீண்டு நெளிந்து செல்லும்
குருதிப் புனலில் குளித்தெழுகிறது
இத்தரணி
பூக்கள் நிறைந்த வனத்தில்
ஒவ்வொரு அநியாயத்திற்கும்
ஒவ்வொரு வஞ்சனைக்கும்
ஒவ்வொரு குரோதத்திற்கும்
ஒவ்வொரு காழ்ப்புக்கும்
ஒவ்வொரு துரோகத்துக்கும்- சிந்தும்
ஒவ்வொரு அப்பாவியின் துளி இரத்ததிற்கும்
ஒவ்வொரு பாவத்திற்கும்- வடிக்கும்
ஒவ்வொரு துளி ஏழையின் கண்ணீருக்கும்
ஒன்றென்ற கணக்கில் உதிரத் துவங்கின.
மெல்லத் துவங்கியது தரணியின்
பூக்களுதிர் காலம்
உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
முட்டித் துளிர்த்தது
நட்பெனும் ஒரு பூ
வையம் பூக்களின் காடானது
மீண்டும்.
படத்துக்கு நன்றி: http://www.webdesignhot.com/wp-content/uploads/2013/02/Abstract-Tree-with-Flower-Patterns.jpg
அமைதியை தேடும் வருணனின் கவிதை அழகு.
நட்பெனும் ஓர் பூ, தீய்ந்த காடுகளையும் பூக்க வைக்கும் தன்மையுடையதெனச் சொல்லும் கவிதை அழகு. இவ்வுலகமுழுதும் பூக்காடாக மாறும் காலம் விரைவில் வரட்டும். மிக்க நன்றி.
தோழர் தனசு, தோழி பார்வதி இருவருக்கும் மனமுவந்த நன்றிகள். நல்லவைகள் நடக்கும் வரை நல்லவைகள் நினைப்பது ஒன்றே கதி. தொடர்ந்து நினைப்போம். பூக்கள் மலரட்டும்.