பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
பாராதிருப்பதில் பயன் என்ன ?
சால்வை மூடிட வலம்வர கொடியோர்
சாடாதிருப்பதில் பயன் என்ன?
வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
வீழாதிருப்பதில் பயன் என்ன?
போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
வாழ்க்கை நடத்திட பயன் என்ன?

படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
எடுத்த வழிமுறை வீணாமோ
பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
வளர்ந்திட‌ சமைத்தார் தன்காலம் ?
நீதி நேயம் நியாயம் தர்மம்
அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பயன் என்ன ? – சத்தியமணி

  1. பிறந்த பயன் என்ன? எதிர் காலம் என்ன? நேரடியாக கேட்காமல் கேட்டு வந்தகவிதையில் நல்ல ரசிப்பு. வாழ்த்துக்கள்.

  2. எல்லாம் காலத்தின் கோலம்…கவிவந்த மாயம் – தமிழுக்கும் தமிழருக்கும் நன்றி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *