இலக்கியம்கவிதைகள்

பிள்ளை பாலுக்கு அழுகிறது

-கிருஷ்ணமாச்சாரி

 

அழுதது நான், சிரித்தனர் பலர்,

பாலுக்கு பிள்ளை அழுகிறது

என கரிசனத்தில்  சிலர்..

அழுதது  நான், வெய்தனர் பெற்றோர்

Ballக்கு பிள்ளை அழுகிறது

என அறிவுரையில் சிலர்

பால் படித்து, பால் சேர்த்து, பால் சேர்ந்து

பெற்ற என் பாலகன்

இன்று வெளிநாட்டில்

நாளை எண்ணும் நான்

இன்றும் அழுகிறேன்..

பிள்ளை பாலுக்கு அழுகிறது.

என முணுமுணுக்கும் பலர்.

பாலுக்கு அழுவதே வாழ்க்கையாய்..

 

படத்துக்கு நன்றி: http://www.dreamstime.com/royalty-free-stock-image-circle-life-sign-image17022616

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    பாலுக்கு அழுவதே வாழ்க்கையாய்..
    பாசத்தில் கிழத்தாயின் பாக்கியாய்..
    இப்போதெல்லாம் பால் தேவையில்லை
    “பீஸா” தான் ! தலைவரே!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க