திருமுருகன் துதிமாலை (5)

இப்பிறவி முப்பிறவி வினையெல்லாம் போக்கி

முக்தியே சேர்க்க வேண்டும்

தப்பியான் செய்கின்ற பிழையெலாம் நீக்கி

பக்தியை ஏற்க வேண்டும்

சிப்பியில் முத்தான வித்தகா ஷண்முகா

சித்தனே செந்தில்நாதா

அப்பிய நீறெலாம் அதிசய மருந்தாக்கி

அமுதாக்கும் குமரதேவே

மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

விளையாடும் வேலகுகனே

துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

முகங்காட்டும் சக்திமகனே   (5)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “திருமுருகன் துதிமாலை (5)

  1. சத்தியமாக நன்றாக இருக்கிறது, சத்தியமூர்த்தியூரான், சத்தியமணியே. வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்

  2. பக்தியும் தமிழும் சங்கமித்த அழகான படைப்பு. வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே!

  3. மிக்க நன்றி திரு இன்னம்பூரான்  அவர்களே. என் பெற்றோர் திருமையத்தில்  பிறந்ததால் பள்ளி கொண்ட பெருமாள்  சத்தியமூர்த்தியின்  பெயரிட நினைத்தார்களாம். ஒரு முருகன் பக்தர் அத்தருணம் வருகை தந்து சுப்பிரமணி என்றாராம். இரண்டையும் சேர்த்த‌தால் இப்படி. இதைக் கவிஞர் வாலியும் வினவினார். பின் இதில் பெயர் காரணமும் உண்டு பொருள் காரணமும் உண்டு என்றார்.
    இந்த துதிமாலையின் சிறப்பு என்ன வென்றால்  “அம்மாவின் மடியில் சிம்மாசனம் ” என்றவுடன் தமிழ் கடவுள் தனைக் காட்டி தன் துதி  மாலையினையும் கூட்டினான். 
    ஆறும் ஆறு நிமிடங்களில். இது அவன் படைப்பு. இவனால்  இயலாத கவிப்பூ.  

  4. அருமையான கவிப்படைப்பு. வார்த்தைகளில் பக்தி ரசம் சொட்டுகின்றது. படிப்பவர்க்கோ பரவசம் ஏற்படுகின்றது. திருமுருகன் அருளின்றி இவ்வாறு எழுதவியலாது. பாராட்டுக்கள் கவிஞர் திரு. சத்தியமணி!

Leave a Reply

Your email address will not be published.