இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றவரே சிங்களவர்??

3

மறவன்புலவு க.சச்சிதானந்தன்


இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றவரே சிங்களவர் எனத் தில்லியிலுள்ள இலங்கைத் தூதர் காரியவாசம் சில வாரங்களுக்கு முன் சொன்னாரல்லவா?

மகாவமிசம் (கிபி 500 அளவில் வெளியானது) என்ற நூலும் அதற்கு முன்பு வெளியான அட்டகதை, தீபவமிசம் (கிபி 100 அளவில் வெளியானவை) ஆகிய பாளி நூல்களுமே காரியவாசம் கூற்றுக்கு ஆதாரம்.

பண்டைய இந்திய நூலாசிரியர் எவரின் குறிப்போ, வேறு வரலாற்றுச் சான்றுகளோ இந்தக் ‘கதைக்கு’ ஆதாரமாக இதுவரை கிடைக்கவில்லை.

இலங்கைக்குப் புத்தர் பயணித்தமையை மகாவமிசமும் அதற்கு ஆதாரங்களாக அமைந்த அட்டகதை, தீபவமிசம் போன்ற நூல்களும் சொல்கின்றன. மணிமேகலைக் காப்பியத்திலும் (கிபி 200 அளவில் வெளியான நூல்) இக் குறிப்பு உண்டு. பிற்காலத்தில் சீனப் பயணிகளும் இக்குறிப்பைப் பதிவுசெய்துளர் (See: Foreign Notices of South India by Neelakanda Sastri, Uni. of Madras).

இலங்கைக்குப் புத்தர் பயணித்த செய்தியை வட இந்திய நூலாசிரியர் எவரும் சொன்னதாகத் தெரியவில்லை, வரலாற்றுச் சான்றுகளும் அங்கில்லை.

காரியவாசம் சொன்ன விசயனின் வருகை பற்றிய குறிப்பும் படமும் கீழே பார்க்க. சென்னை – காந்தளகத்தில் (0091 44 2841 4505) இந்தப் படங்கள், நான் எழுதிய இச்செய்திகள் தாங்கிய நூல் விற்பனைக்கு உண்டு.

மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்பு (சைவ. சித். நூற் பதி. கழகம்) மற்றும் Foreign Notices of South India by Neelakanda Sastri, (Uni. of Madras) காந்தளகத்தில் கேட்டால் பெற்றுத் தருவர்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றவரே சிங்களவர்??

 1. கலிங்கப் போரில் வெற்றிகண்ட பின் புத்த மதத்தைத் தழுவிய அசோகன் தனது மகனையும் மகளையும் புத்த மதத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பியதாகவும் அவர்களோடு போர்க் கைதிகளும், அடிமைகளும் உடன் ஆயிரக் கணக்கில் சென்றதாகவும், இவர்களே சிங்கள இனத்தினரின் முன்னோடிகள் என்றும் என் நண்பர் ஒருவர் மூலம் கேள்வியுற்றேன். சிங்கள மொழிக்கும் ஒரிய மொழிக்கும் இருக்கும் ஒற்றுமையே இதற்கு சான்று என்றும் கூறுகிறார். இச்செய்தியின் உண்மைத் தன்மையை விளக்குமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 2. 1. புத்தர் இலங்கைக்கு வந்தபொழுது தமிழர் மட்டுமே இலங்கையில் வாழ்ந்தனர்.
  2. புத்தர் இறந்த நாளில் வங்க இளவரசன் விசயன் இலங்கையில் 700 சகாகக்களுடன் கரையேறினான் என இலங்கையில் பாளி மொழியில் எழுந்த பல நூல்கள், மகாவமிசம் உள்ளிட்டன கூறும்.
  3. அசோகன் காலத்தில் இலங்கையில் அனுராதபுர அரசு மட்டும் இந்து அரசாக இருந்தது. அந்த அரசு விசயன் வழிவந்தோரின் அரசு, சிங்கள முன்னோடிகளின் அரசு என மகாவமிசம் கூறும். அக்காலத்தில் இலங்கையின் வடக்கே தமிழரின் நாகநாட்டரசு, மேற்கே தமிழரின் களனி அரசு, தெற்கே தமிழரின் உரோகண அரசு யாவும் புத்த சமயிகளின் அரசாக, புத்தரால் புத்த சமயத்துக்கு மாற்றப்பட்டவரின் அரசுகளாக இருந்தன. எனவே அசோகனின் பரப்புநர் (அவர்கள் மகள், மகன் என்பதற்குச் சான்றுகள் அசோகனின் கல்வெட்டுகளில் இல்லை) அனுராதபுர அரசை நோக்கி வந்தனர்.
  4. சிங்கள மொழியில் 60% தமிழ்ச் சொற்கள், 30% பாளிச் சொற்கள், மீதி வடமொழி, பிராகிருதம் எனப் பல சார்ந்தன. வங்க, ஒரிய மொழிகளில் திராவிட, தமிழியச் சொற்கள் உள. மேலோட்டமாக எதையும் கூறமுடியவில்லை. போதுமான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. 
  நன்றி

 3. தங்களது விளக்கத்திற்கு நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *