சம்பு நடம்பயிலும் தருணம்

 

-சு.ரவி

ஸ்ப்தஸ்வரங்கள் உடன் உதயம்..

விரிசடை முகிலென வான்மேல் பரவிட

பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட

ஏழுலகங்களும் தூளி பறந்திட

பூத கணங்களின் கோஷ மெழுந்திட

கங்கை குலுங்கிட, தண்மதி உருகிட

அங்கை எழுந்தொரு செந்தழல் ஆடிட

கைத்தா மரையினில் டம டம டம வென

வைத்தொரு டமருகம் இடியென ஒலிதர

சிந்தை மயங்கும் நந்திம்ருதங்கம்

மேளம், தாளம், பஞ்சமுகம், பறை

கொட்டும் இடக்கை குமுறும் உடுக்கை

சிவமே லயமாய், சிவமே ஸ்ருதியாய்

விசை நடனம் தரும் இசை வடிவம்.

சம்பு நடம்பயிலும் தருணம்

ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.

 

பார்க்க, படிக்க, ரசிக்க…

2 thoughts on “சம்பு நடம்பயிலும் தருணம்

  1. பிரமாதம். விரிசடையோன் ஓவியம் கண்டதும் அவன் விழிகள்போல் என்விழிகளும் விரிந்தன. அவன் கரங்களின் முத்திரைகள் கண்டதும் முயலகன் முகம் போல் பிரமித்தேன்.  தேதி பார்த்தால் சுடச்சுட வரைந்ததோ?

  2. மிகவும் அருமை. வாழ்த்துக்கள் திரு.ரவி அவர்களே.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க