செண்பக ஜெகதீசன்

 கிடைத்திருக்கும் உயர்ந்த இடம்,

கோபுர பொம்மைக்குக்

கொண்டுவந்துவிடுகிறது கர்வத்தை-

கோபுரத்தையே தாங்குவதாய்..

 

கவலைப்படுவதில்லை கோபுரம்,

உண்மை அதற்குத் தெரிவதால்..

 

இதுதான் கதை மனிதனிடமும்-

அவனுக்குக் கர்வம்

அதிகமாகும்போது சிரிக்கிறான்

ஆண்டவன்…!

படத்துக்கு நன்றி

   http://www.elanguages.org/20283

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கோபுர பொம்மையாய்…

  1. ஒரு வரி தத்துவம் என்பார்களே அதுபோல் சின்னதாய் ஒன்று.

    //அவனுக்குக் கர்வம்
    அதிகமாகும்போது சிரிக்கிறான்
    ஆண்டவன்…!////

    தனக்கு கிடைப்பது மரியாதை என்பதை புரியாமல் தன்னைக்கண்டு பயப்படுகிறார்கள் என புரிந்துகொள்கிறான். விளைவு கர்வம். அப்போது தான் ஆண்டவன் சிரிக்கிறான்.

  2. தனுசு அவர்களின் கருத்துரைக்கு
    மிக்க நன்றி…!
    -செண்பக ஜெகதீசன்…

  3. கருத்தாழம் மிக்க அருமையானதொரு கவிதை.  தன்னை ஆட்டுவிப்பது இறைவனென்று புரியாமல், அனைத்துக் காரியங்களையும் தான் செய்வதாகவும், தன் விருப்பப்படி நடப்பதாகவும் எண்ணுவது எவ்வளவு பெரிய அறியாமை!!!. பகிர்விற்கு மிக்க நன்றி.

  4. பார்வதி இராமச்சந்திரன் அவர்களின்
    பகிர்வுக்கும் கருத்துரைக்கும்
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *