இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(73)

 சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்புடை வாசக உள்ளங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

இங்கிலாந்து பல்வேறு இனத்தவர் , பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சாரம் கொண்ட நாடு.

எதனது பல்லினக் காலாச்சார வாழ்வில் இனக்களுக்கிடையே உள்ல இணக்கப்பாடு எத்தனை முன்னில்லை கொண்டதாக இருந்தாலும் காலத்துக்குக் காலம் பொருளாதார ச் சீர்கேடு கொடுக்கும் நெருக்கடியாலும், அடிமனதில் ஊறி நிற்கும் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் தாக்கங்களையுடையவர்களின் பிரச்சாரத்தாலும் இங்களுக்கிடையெலேயான முறுகல் நிலை பல்வேறு நாடுகளிலும் ஏற்படுவதுண்டு.

இங்கிலாந்து இதற்கொன்றும் விதிவிலக்கான நாடு அல்;ல.

ஆனால் இவ்வினக்களுக்கிடையே ஏஎர்படும் இம்முறுகல் நிலையை எதிர் கொள்வதற்காகவும் இனங்களுக்கிடையே உள்ள ஜக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்ப்பதற்காகவும் சேவையாற்றுவோர் அனைத்து சமூகங்களிலும் செயற்படுகிறார்கள்.

இத்தகைய செயற்பாட்டுக்கு பல்வேறு இன மக்களின் கலாச்சார அடிப்படையைப் பற்ரிய புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது அவசியம்..

என்ன எத்திசையை நோக்கிப் போகிறது இம்மடல் ? எனும் வினா உங்களுக்குள் இப்போது எழுந்திருக்க வேண்டுமே ?

இங்கிலாந்தில் கோடைகாலத்தில் (Summer Time) நான் இங்கு வந்த காலத்திலிருந்து தவராமல் நடைபெற்று வரும் ஒரு கலாச்சார நிகழ்வு “நொட்டிங் ஹில் காணிவல் ( Notting Hill Carnuval ) எனும் ஒரு நிகழ்வாகும்.

மிகவும் விமரிசையாக நடைபெறும் இக்கலாச்சார விழாவானது மேற்கிந்திய தீவு மக்களின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆகஸ்ட் மாத இறுதியில் வரும் பொதுவிடுமுறை ஒரு திங்களில் விழுவது வழக்கம். இப்பொதுவிடுமுறை வரும் அந்த மூன்று தினங்களடங்கிய வார இறுதி விடுமுறையில் அம்மூன்று நாட்களும் இவ்விழா இலண்டனின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் நாட்டிங் ஹில் (Notting Hill ) எனும் பகுதியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சரி இவ்விழாவின் பின்னனி என்ன என்று பார்ப்போமா?

இவ்விழாவின் பின்னனியில் வெறுபட்ட ஆனல் கருத்தால் இணைந்த இருவேறு நிகழ்வுகள் இருக்கின்றன.

1958ம் ஆண்டு இலண்டனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இதே “நாட்டிங் ஹில்” எனும் பகுதியில் இங்கிலாந்தின் மிக மோசமான இனக்கல்வரம் நடைபெற்றது.

காலாச்சாரப் புரிந்துணர்வு இல்லாத காரணத்தினாலேயே இத்தகைய இனக்கலவரங்க|ள் இடம்பெறுகின்றன என்பதையுணர்ந்த “குளோடியா ஜோன்ஸ் (Claudia Jones ) எனும் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான Trinidad and Tobago எனும் தீவைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெண் “மேற்கிந்திய தீவு விழா ( Caribean carnival )” எனும் விழாவை இலண்டனில் உள்ள St.Pancras Town hall எனும் இடத்தில் 1959 ஜனவரி 30ம் திகதி நடத்தினார்.

ஆனால் இது ஒரு மண்டபத்தினுள் நடக்கும் நிகழ்வாக அமைந்தது.

அது போல 1966ம் ஆண்டு நாட்டிங் ஹில் பகுதியில் ” ஹிப்பி லண்டன் ப்ரீ ஸ்கூல் ” எனும் அமைப்பால் தெரு விழா ஒன்று அமைந்தது. .

இவ்விரண்டு விழாக்களின் ஒன்றினைப்பே தற்போது நடைப்பெற்று வரும் ” நாட்டிங் ஹில் விழா “

இவ்விழாவில் ஆரன்ப காலங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவர்ரின் சீர்குலைவுகள் நடைப்பெற்றிருந்திருக்கின்றன.

பெரும்பான்மையாக மேற்கிந்திய தீவுஇன் பின்னனியைக் கொண்ட இளம் தலைமுறையினர் ஈடுப்படும் விழாவாக இருக்கும். பல சமயங்களில் இக்குழுக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே பல கலவரங்கள் மூண்டுள்ளன.

ஆனால் சமீப காலங்களில் இவ்விழா பொதுவாக அமைதியான முறையிலேயே நடைபெற்று வருகிறது.

மேர்கிந்திய தீவுகளின் காலாச்சாரத்தில் அமைந்த பல வித நடனங்களையுள்ளடக்கிய ஊர்வலங்கள் இத்தெருக்களில் கோலாகலமாக அரங்கேறும்.

பல காலாச்சர மக்களுடைய உணவுச் சாலைகள் தெருவோரம் போடப்பட்டு இருக்கும்.

இவ்விழாவில் இப்போதைய காலங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுவே தெருவில் நடைபெறும் விழாக்களில் உலகளவில் மிகப்பெரியது என்று கணிக்கப்படுகிறது.

இத்திருவிழாவினால் இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு ஏறத்தாழ #93 மில்லியன் நன்மை கிடைக்கிறது என்கிறது ஒரு பொருளாதார அறிக்கை .

இதுவரை இவ்விழாவின் வன்முறையால் 5 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

பல்லின மக்கள் கலந்து வாழும் ஒரு நாட்டில் அமைதியும், சமாதானமும், நீதியும் நிலைபெற வேண்டுமானல் கலாச்சாரப் புரிந்துணர்வு அவசியம். ஒருவரின் கலாச்சாரம் மற்றவர் மீது திணிக்கப்படாத வகையில் அதை கொண்டாடப் பழகிக் கொண்டால் அங்கு அமைதியும், சமாதானமும் நிலவுவது உறுதி.

 மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(73)

 1. சிங்கையில் எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் ஓர்விலை;
  தகுதியுடைய யாவரும் இந்நாட்டு மன்னராகலாம் 

  ////பல்லின மக்கள் கலந்து வாழும் ஒரு நாட்டில் அமைதியும், சமாதானமும், நீதியும் நிலைபெற வேண்டுமானல் கலாச்சாரப் புரிந்துணர்வு அவசியம். ஒருவரின் கலாச்சாரம் மற்றவர் மீது திணிக்கப்படாத வகையில் அதை கொண்டாடப் பழகிக் கொண்டால் அங்கு அமைதியும், சமாதானமும் நிலவுவது உறுதி.////

  உண்மை தான் இக்கருத்தையே இங்கு சிங்கையிலும் முன்னிறுத்தப் படுகிறது. இன நல்லிணக்க நாளென்று பள்ளிகளில் கூட அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து கொண்டாடப் படுகிறது..   

  “Racial Harmony Day is celebrated annually on 21 July in Singapore. The event is to commemorate the 1964 Race Riots, which took place on 21 July 1964.
  Racial Harmony Day also represents a day for schools to reflect on, and celebrate Singapore’s success as a racially harmonious nation and society built on a rich diversity of culture and heritage. In schools all across the nation on that day, students are encouraged to be dressed in their traditional costumes such as the Cheongsam, the Baju Kurung and Punjabi Suit. Traditional delicacies are also featured in the celebrations. Traditional games such as Kutih-kutih and zero point are played in schools, where inter-class competitions are sometimes organised.”

  பகிர்விற்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *