வல்லமையாளர்களுக்கு எம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

பட பட பட்டாசு இடபுறம்

படபடப்புடன் பலர் வலபுறம்

வெடி வெடி வெடியென இடபுறம்

வெடியால் செவிடர்கள் வலபுறம்

புகைந்திடும் சூழல் இடபுறம்

இருமலில் இரைப்பவர் வலபுறம்

கலகலச் சக்கரம் இடபுறம்

கடனுக்கு கஞ்சி வலபுறம்

இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்

இயலாமையில் சிலர் மறுபுறம்

ந‌ரகாசுரர்க‌ள் எதிர் புற‌ம்

நார‌ணண் ந‌ம்பி ந‌ம்புற‌ம்

குய‌வ‌ரின் விள‌க்குக‌ள் எரிந்திடவே

க‌ய‌வ‌ரின் இன‌ங்களும் குறைந்திடவே

பிணிக‌ளும் பேய்க‌ளும் நீங்கிட‌வே

அணிக‌ளும் வாழ்த்தும் சேர்ந்திட‌‌வே

அன்புட‌ன் இனிப்பாய் ! புத்தாடை

அணிந்தே ஆட‌டி “தீபாவ‌ளி”

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அணிந்தே ஆடடி “தீபாவளி”

  1. அன்பு சத்தியமணி இத்தனை இருமல் ,இரைச்சல் புகை . மாசுற்ற சூழல் எல்லாம் இருந்தும் அத்தனையும் பொறுத்துக்கொண்டு நம் கலாச்சாரத்தை விடாமல்  தீபாவளியின் போது “கங்கா ஸ்னானம் ஆச்சா ‘என்று கேட்கும் போது ஏற்படும் ஆனந்தம் இருக்கே   இனிப்பைத்தின்றப்பின் அந்த தீபாவளி லேகியம் இருக்கே அதெல்லாம வேறு எங்கேயாவது கிடைக்குமா? 

  2. இனிப்பும் காரமும் போல புகையும் தீயும் போல இரு கவிதைகள் வல்லமையாளர்களுக்கு பகிர்ந்துள்ளேன்.  
    கவியோடு சேர்ந்த இசையையும் இசையோடு சேர்ந்தக் கவியும் (youtube) இவைகளைச் சேரந்தந்த தமிழும் 
    அன்னை மீனாள்  அளித்த அமுத வரங்கள்! பகிர்தலில் அட்சயம் பெருகுது பன்மடங்கு! யாம் பெற்ற் இன்பம் பெருக இவ்வையகம்!

  3. சுற்றுப்புறக் கேட்டைத் தீபாவளி கவிதையில் வெடிக்க வைத்த சத்தியமனி அவர்களுக்குப் பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *