மறைந்திருந்தே கேட்கும் மர்மமென்ன?

(மெட்டு : மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன )

மறைந்திருந்தே கேட்கும் மர்மமென்ன?

இவள் கவி அழகா இல்லை தமிழ் அழகா வென்று ()

 

கவிரசமும்

கருத்தில்  கவிரசமும்

கவி         தரும்   கருத்தில்    கவிரசமும் – காதல்

மொழி    வரும்  விதத்தின்   மதுரசமும்   கேட்டு ()

 

எங்கிருந்தாலும் உன்னை நான் அடைவேன் – உன்னை

என்னையல்லால் வேறு யார் அடைவார்

முத்தமிழ் சதிராட  மோகமா இதழ்

மொத்தமும் உனக்கென்றேன் போதுமா

மாதவா மாயவா ஸ்ரீதரா கோவிந்தா ()

 

மயக்கிடும் முரளி இசைக் கேட்டேன் – அதன்

வசியத்திலே யமுனையில் நான் மிதந்தேன்

காதலிலே என்னைத் தவிக்கவிட்டு   ஒரு

பாவமும்  செய்யாப் பிள்ளையைப் போல்

மாதவா மாயவா ஸ்ரீதரா கோவிந்தா ()

 

சொல்ஆட  பொருளாட அணியாட  சந்தமாட,  சந்தமுடன் சிந்துமாட‌

எழுத்தாட   அசையாட  சீராட   தளையாட,  அடியோடு  தொடையுமாட‌

(நேராட நிறையாட நிறைவோடு நாவுமாட , புணர்ச்சியின் உணர்ச்சியாட‌)

இடையாட நடையாட சுரமாட நடமாடி நீயும் வாராய்
மாயனே மாதவா கண்ணனே கேசவா எனையாளும் வேங்கடா வா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.