இலக்கியம்கவிதைகள்

அன்னையின் கருணை!

-சீர்காழி உ. செல்வராஜு

அன்னையின் கருணை அமுதம் போன்றது

அன்பே தாயென வடிவம் பெற்றதுmother and a child

உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது

உறவே நிறையென உள்ளம் நிறைந்தது!

 

வாழ்வின் தத்துவம் சொல்லித் தந்தது

வாழ்வே கலையென வகுத்துச் சொன்னது

உணர்வைச் செதுக்கிடும் மகிமை வாய்ந்தது

உழைப்பே உயர்வென ஊக்கம் படைத்தது!

 

பசியில் பகிர்ந்திடக் கற்றுத் தந்திடும்

பரிவே மூச்சென மலரச் செய்திடும்

இனிய சொற்களைப் பேச வைத்திடும்

இல்லமே கோயிலென உணரச் செய்திடும்!

 

வினாக்கள் பற்பல விடைகள் கிடைத்திடும்

விதியே இன்றி வினோதம் படைத்திடும்

நிழலாய் ஒளியாய் நிலையாய்க் காத்திடும்

நினைந்தே நெஞ்சம் நிம்மதி பெற்றிடும்!

 

கருணை உள்ளம் கண்களில் மின்னிடும்

கண்களில் கண்ணீர்ச் சொரிந்து வடிந்திடும்

தேகம் வளர்ந்திடத் தேனாய்ச் சுரந்திடும்

தேறிட மனமோ அம்மா என்றிடும்.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க