உ. சீர்காழி செல்வராஜூ

நாகப்பட்டிணம் மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள தண்ணீர் பந்தல் சொந்த ஊர்,. 15 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணியாற்றி சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்றிருக்கிறார். தற்சமயம் கப்பல் கட்டுமானத் துறையில் பொறியாளராக சிங்கப்பூரில் பணி செய்து வருகிறார். வாசிப்பும், எழுத்தும் இவருடைய முக்கியமான பொழுதுபோக்கு. சிங்கப்பூரின் தேசிய தமிழ் நாளிதழான தமிழ் முரசில் பல கவிதைகள் வெளி வந்துள்ளன. ஒரு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.