ஒரு நாள்
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக! – (1)
காலத்தால் அழியாதது காதல் மட்டுமே. கவிஞர்களுக்கு இந்த காதல் மட்டுமே தங்களின் இருப்பை உணர்த்துகிறதோ என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு, ஆண்டவனிடம் தொடங்கி, ஆயர்பாடி ஆடு மற்றும் மாடுகளிடம்கூட அற்புதமாக காதல்மொழி பேசும் வல்லமையை இவர்கள் எங்கிருந்துதான் பெறுகிறார்களோ! அந்த வகையில் நம் இசைக்கவி ரமணன் அவர்களின் ‘உனக்கே உனக்காக’ என்ற காதல் கவிதைகளின் தொகுப்பின் முதல் பகுதியாக இப்பாடலை அவர்தம் இனிய குரலிலேயே கேட்டு மகிழலாம்.
ஒருநாள்..
(பாடல்)
மலராகப் பிறக்க வேண்டும்
உன் கூந்தலில்
சிலநேரம் இருக்க வேண்டும்
ஒருநாள்
தென்றலாய்ப் பிறக்க வேண்டும்
உன் மடியினில்
குழந்தைபோல் தவழ வேண்டும் (ஒருநாள்)
இருந்ததுவும் ஓரிதயம், அதைக்
கவர்ந்து கொண்டாய்
இமைவிளிம்பில் ஒரு பார்வையில், உன்
நெஞ்சைத் தந்தாய்
உன் மடியில், கண் மூடி
என் பாடல் காற்றில் மிதந்திடவே (ஒரு நாள்)
உன்னிடமே என்னென்னமோ நான்
சொல்லிட வந்தேன்
கண்ணெதிரில் உன்னைக் கண்டதும் நான்
என்னை மறந்தேன்
என்னுயிரே! என் துணையே!
என் தெய்வம் என்றும் நீதானே! (ஒரு நாள்)