இலக்கியம்கவிதைகள்

வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி!

-நாகை வை. ராமஸ்வாமி

neela

சுந்தரி, ஷ்யாமளி, மதுர மனோஹரி, ஹ்ருதயேஸ்வரி
கந்த மாதா, காதம்பரி, கனக தாரேஸ்வரி, காரோணேஸ்வரி
எந்தனுள்ளம் வந்தமர் பூர்ணேஸ்வரி ஸ்ரீ சக்ரேஸ்வரி
வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி!

தந்த முகனும் தம்பியும் தவறா ஆசி தர
நந்தி வாகனன் காரோணன் நலமுற அருளிட
புந்தியில் போற்றினனே புன்னகை அரசியே
சொந்த மெனையேற்று வந்தருள் நல்குவளே!

சிந்தனை சிதறாது நினதடி போற்றவும்
வந்தவர் நின் சன்னிதி வளமுடன் மகிழவும்
பந்தங்கள் சொந்தங்கள் பலவும் பெறவும்
எந்தனையாண்டு என்றென்றும் காத்திடுவாய்!

சர்வேஸ்வரப் ப்ரியே, சர்வலோக மாதா
சர்வோத்தமி, சர்வநாமகான காரணி
சர்வ பாப நாசினி, சர்வாலங்கார பூஷணி
சர்வரக்‌ஷகி சர்வமயீ நீலாயதாக்ஷி!

சர்வத்திலும் நினைக் காண
சற்குணம் தந்தருள்வாய்
சர்வ ஜனனமும் நின்னடி போற்றிட
சர்வ காருண்ய நீலாயதாக்ஷி வரமருள்வாய்!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க