-சேசாத்ரி பாஸ்கர்

எல்லா இடத்திலும் உயிர்
தாங்கும் மரத்தில்
தூங்கும்  ஆந்தையில்
கழுத்து நோக நிற்கும் பறவையில்
கனம் தாங்காத  புல்லில்
அந்த நீரின் ஓட்டத்தில்
குதிக்கும் அலையின் ஆட்டத்தில்
மிதிபடும் மணலில்
மற்றும் என் மூச்சில்
இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில்
எல்லாம் ஒரே உயிர்
உயிர்த்துக்கொண்டே மரிக்கும்
பிறந்தோர் பயணிப்பர்
திசை எல்லாம் ஒன்றே!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க