-பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

அவை
மூலதனம்
முகவரியும்கூட!

ஆத்திரத்திலும்
அரிதாரத்திற்காகவும்
செலவு செய்ததில்லை
செலவு செய்வதில்லை

அனைத்திற்கும்
முதலீடுசெய்வதில்லை
செலவுகள்
தீர்க்கமானவை
தெளிவானவை

அவற்றிற்குத்
திசைகளுமுண்டு
இலக்குகளுமுண்டு

பரிணாமத்தின் கிடங்காகி
அடர்த்தியாகச்
சேமிக்கப்பட்டிருக்கிறது
பரிமாணத்தின்
அடையாளமாக
அவ்வப்போது வழங்கப்படுகிறது

வெளிச்சமேடையில்
விரயம் செய்வதில்லை
விதைத்தவை
விளைந்தவை
அறுவடையாகவேண்டுமென்பதிலேயே
கவலையும்
கரிசனமும் கலந்து
கழிகிறது காலம்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க