வணக்கம் வாழிய நலம்

யமுனை நதியின் பரப்பில் பால்வெண்ணிலவு பாதரசத்தில் பாதைவிரிக்கும்!
ஆங்கே வேய்ங்குழல் ஊதி ராதையின் மனத்தைக் கொள்ளை கொள்ளும்
ராதாமாதவனைத் தன் தேமதுரக் குரலில் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம்
திரு ரமேஷ் வினாயகம் இசையமைப்பில் பாடுவதைக் கேட்க கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

பாடலும், பாடற் காட்சியும்
பார்க்க, ரசிக்க….

சு.ரவி

https://ia601204.us.archive.org/21/items/SuraviKrishnarAlbumSongs/09Track9.mp3

ராதா மாதவன் வரும் நேரம் …

D69987FC-F4ED-4580-9CAD-7395C7C5978A

ராதா மாதவன் வரும் நேரம்
ராகங்களோடு கவிசேரும்
யமுனா தரங்கம் அலைமோதும்
யது நாதன் என்று துதிபாடும்!
ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
ஓரிரவினிலே கோகுலம் நாடி
மழலை பேசி வளர் மாயன்!
இடையர்சூழவே கானகம் ஏகி
மாடுமேய்த்திடும் ஆயன்!
கார்கால மேகம் அவன் தேகம்!-கோ
தூளி செய்யும் அபிஷேகம்!
வனமாலை சூடி விளயாடும்- ஸ்ரீ
வாசுதேவனே போதம் !
ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா! (ராதா மாதவன்)

பூரண நிலவில் வேய்ங்குழல் வழியே
அமுத கீத நதி பாயும்!
தமைமறந்திடும் கோபியர் நெஞ்சம்
வேணுகானமதில் தோயும்!
கோவிந்த ரூபமே த்யானம்!
கோவிந்த கானமே ஞானம்!
நவ நீதமாகும் மனம் யாவும்- ஸ்ரீ
க்ருஷ்ண மந்திரம் ஆகும்!
ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா! (ராதா மாதவன்)

சு.ரவி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க