நான் அறிந்த சிலம்பு – 147
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை
சூரியன் உதித்தல்
அவர்கள் புறஞ்சேரி புகுந்தபின்
அங்கிருந்த பூஞ்சோலைகளிலும்,
விளங்குகின்ற நீரையுடைய பண்ணைகளிலும்,
கதிர்கள் வளைந்து தொங்குகின்ற கழனிகளிலும்,
பறவைகள் எழுந்து ஆர்ப்பரித்து ஒலியெழுப்பின.
வைகறைப் பொழுது புலரும் போது,
குளத்தின்கண் உள்ள தாமரைகளை மொட்டவிழ்க்கும்
உலகிலுள்ளோர் யாவரும் தொழுது வணங்கும் கதிரவன்,
பகையரசர்கள் நடுங்கும் வண்ணம்
வீரவாளை ஏந்திய பாண்டியன் அவனின்
வீரத்தால் ஏற்றம் பெற்ற
மதுரை நகரின் துயில் எழுப்பினான்.
காலை முரசத்தின் ஒலி
நெற்றியில் கண்ணுடைய
சிவபெருமான் கோயிலிலும்,
சேவல் கருடனைக் கொடியாகக் கொண்ட
பெருமாள் கோயிலிலும்,
வெற்றிக் கலப்பை ஏந்திய
பலராமன் கோயிலிலும்,
சேவற்கோழிக் கொடியுடைய
முருகன் கோயிலிலும்,
அறநெறி சார்ந்து வாழ்கின்ற
முனிவர்களின் பள்ளிகளிலும்,
வலிமை அமைந்த
மன்னனின் அரண்மனையிலும்,
தூய வெள்ளைச் சங்கின் ஒலியுடன் சேர்ந்து
கொடை முரசு, வெற்றி முரசு, நீதி முரசு எனப்படும்
மூவகை முரசுகளும் முழங்கின.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 14
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–
படத்துக்கு நன்றி:
http://nature.desktopnexus.com/wallpaper/1726024/