இலக்கியம்கவிதைகள்

அம்மாவும் சாதனைப் பெண்தான்

 

ஆர்  எஸ் கலா
unnamed

ஆண்டி ஆனாலும் அரசன் ஆனாலும்

பூமியில் அடி எடுத்து வைக்கும்

முன்பே முதல் அடி வைத்தது அம்மாவின்

கற்பத்தில் இருக்கும் போதே நாம்

கொடுத்த உதை தான் நம் முதல் அடியே

அன்னையின் அடி வயிற்றில் தான்
ஆரம்பம்..

இதை உணராத பிள்ளை

இறுதி நேரம் தடி கூடக்
கொடுக்க மனமின்றி

பிடி
சோறு கொடுக்க இரக்கமின்றி

கோடித்துணி கொடுக்க அக்கறை இன்றி

சிறு இடம் வீட்டில் ஒதுக்கப் பாசம் இன்றி

தவிக்க விடுகின்றனர் தனிமையில்

தள்ளியே வைக்கின்றார்கள் பத்து மாதம்

சுமந்தவளைப் பதைக்க விடுகின்றார்கள்

பால் ஊட்டி வளர்ததவளை விரட்டி

விடுகின்றார்கள் நிலாக் காட்டி சோறு

ஊட்டியவளைநிராகரித்து விடுகின்றார்கள்

தன் தொடை மீது தலை சாய்த்து தாலாட்டுப்
பாடியவளை

துணைக் கரம் கொடுக்காமலே

தூரமாகவே அனுப்பி விடுகின்றார்கள்

அரண்மணை போல் வீடு அன்னை இல்லம்
பேரு

அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்

தான் தன் தாய்க்குச் செய்வதையே

அவன்
பிள்ளை அவனுக்குச் செய்யும்

என்பதையே
மறக்கான் தாய் பட்ட வலியையும் நினைக்காமல்
இருக்கான்

தாமைக்குநிகராக ஒன்றும்
இல்லை

இறைவனும் அதன் பின்னே
என்று உணர்ந்தால்

ஒவ்வொரு பிள்ளையும்
மறைந்து விடும் முதியோர் இல்லம்

கவிக்குயில் ஆர் எஸ் கலா
மலேசியா

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க