-ரூபன், ஈச்சிலம்பற்றை, இலங்கை

நிலவே ஒருநாள் முகம்காட்டு
உன் முகவரி எனக்குத் தெரியட்டும்
தவழ்ந்து தவழ்ந்து நீந்துகிறேன்
நினைவு உள்ளே வரும்வரைத்
தவமாய் இருந்து துாங்குகிறேன்
தாவித்தாவிப் பிடிக்கிறேன்
தள்ளித்தள்ளிப் போகிறாய்
தவமும் கலைந்து போகுதடி
தாவி அணைக்கத் துடிக்கிறேன்!

இருட்டறை கொண்ட மாளிகையில்
இருளும் சூழ இருக்கின்றாய்
ஒற்றைப்பார்வை பார்க்கிறாய்
ஓரக்கண்ணாய் தெரியுதடி
ஓடி ஓடி வருகிறேன்
உள்ளம் அணைத்துப் பிடிப்பதற்குக்
கையும் ஒன்றை ஊன்றுகிறாய்
கருணையுள்ளம் தெரியுதடி!

சிவந்த சேலை உடுத்துக்கிட்டுச்
சிவத்த சூரியன் வருகையில்
மேனியும் அக்கினி நிறத்தில் தெரியுதடி
வருவேன் வருவேன் இருந்திடுவாய்
காலம் விரைவில் பதில்சொல்லக்
கணப்பொழுதில் வந்திடுவேன்
சொந்தம் நட்பும் பலம் கொள்ள
இணைவோம் வாழ்வில் ஒன்றாக!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நிலவே முகம் காட்டு!

  1. “நிலவே ஒருநாள் முகம்காட்டு
    உன் முகவரி எனக்குத் தெரியட்டும்” என
    நன்றே பாப்புனைந்தீ்ர் – என்றும்
    இனிய பாவரிகளுடன் தொடர்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.