-பா வானதி வேதா. இலங்காதிலகம்
பளிங்கு பளிங்கு கண்ணாடி
பளிங்கு பளிங்கு படிகம்
வெளிப்படை! உயிர் காக்கும்!
நளினம் தண்ணீர் – தெளிநீர் 
தெளிப்பு சீவன்கள் கொழிப்பு!
நளினமின்றி உயிருலகு இல்லை
துளி பட்டாலும் துளிர்க்கும்
நளிவுடை நளிர் திரவம்
ஆறு, கடல், குளத்தில்
பீறும் மழையாயும், குட்டையிலும்
ஊறும் பஞ்சபூதத்தில் ஒன்று
சேறு, குற்றம் களையும்
மீறும் தீ அணைக்கும்
வீறு கொண்டு பாயும்
நீருக்குச் சிறை பனி
நீராவி குளிர, திரவம்
அசுத்தம் சிறுநீர் உப்புநீர்
அருமைப் பதநீர் தேனீர்
அழுதால் கண்ணீர் சுடுநீர்
பித்தநீர் மஞ்சள் நீர்
இளநீர் குடிநீர் பலவகை
நீர் பூமியில் 71விகிதம்
நிறமற்ற புதுமை தனித்தன்மை
திறமைப் பயன் மின்சாரம்!

Leave a Reply