வல்லமைக்கு வயது- 06
வெறும் புகழ்ச்சி அல்லஉண்மை !
வல்லமை யெனும் தேனமுதச்
செந்தமிழின் –
சுவையெல்லாம் உய்த்துணர்ந்தேன் !
சிந்தையெலாம் நிறைந்த
ஒரு –
சுகானந்த அனுபவத்தில் திளைத்தேன் !
களித்தேன் !!
வல்லமை
வெண்மையும்
பசுமையும்
மெலெழில் பூத்து ,
இன்றைய தேவையில் –
வாழ்வில்
பசுமையும்
சமாதானமும்
அமைதியும்
உணர்த்துவதாக இருகின்றது !
வல்லமை
கலை உள்ளங்களின்
வாழ்வில் –
செழுமை சேர்த்திருக்கின்றது !
நல்ல முயற்சி
பவள சங்கரி திருநாவுக்கரசு,
அண்ணா கண்ணன்,
தேமொழி,
மேகலா இராமமூர்த்தி,,
அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்),
தி. சின்னராஜ்,
மதுமிதா,
இன்னம்பூரான்,
மறவன்புலவு க. சச்சிதானந்தன்,
விஜய திருவேங்கடம்,
விசாகப்பட்டினம் வெ. திவாகர்,
ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்,
ஸ்ரீநிவாசன்,
காமேஷ்,
செல்வ முரளி,
முனைவர் நாகபூஷணம்,
ஆகியோர் துணிவில் மலர்ந்த தூய பணி !
வல்லமையைப் பார்க்கும் போது
படிக்கும் போது –
அதற்கு எழுதும் போது
நினைக்கும் போது
நிறைவுகளே நெஞ்சில் நிறைகின்றன !
வல்லமைத் தளத்தில் நின்று பார்த்து
சளித்து களைத்தது போதும் !
இக் குளிர் நீர் பொய்கையில்
இறங்கி சுவை நீர் பருகி
சிறிது விடாய் ஆற்றிக் கொள்ள விழைகிறேன் !
வல்லமை
கவிப்பூக்களை
தன் சிற்றலைக் கரங்களால் ஏந்தி
இசைபாட காலாயிருந்த
நேசவுள்ளங்களின் துடிப்பு !
வல்லமை
இந்திய மண்ணில் ஊற்றெடுத்து
குதித்தோடி உலகமெங்கும் ஓடிவரும் நதி !
வயலில் பாய்ந்து
வளர்த்திடும் செந் நெல் போல ,
தூய சிந்தையில் ஊறி வரும்
களம் நீர் தான்
வளர்க்கும்எங்கள் கலைப் பயிரை !
வளர் சுடர் போலொளி வீசும்
வல்லமை –
அறிவிலும் சிறந்த
நல் இதயப் பேழை!
தன்னகம் கொண்ட தமிழ் தளம்
வல்லமைக்கென் பைந்தமிழ் வாழ்த்து !
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை
வல்லமை என்னும் வாசலது வரவேற்ற கோலங்கள்
அன்றும் என்றும் என்மனதில் நிலையான நினைவுகள்..
பெருவை சாரதி ஒரு பக்கம் அழைத்தார்.. பெங்களூர்..
ஷைலஜா மறு பக்கம் கிடைத்தார்.. பழைய பாடல்கள்
பற்றிய பதிவுகள் இனிதே தாருங்கள் என்றவர் சொல்ல..
கவிதை வானிலே பூரணச் சந்திரன் கண்ணதாசன் புகழ்
இன்னுமொரு வகையிலே பரவிட வழியிது என்றே
வாரம் மூன்று நாட்கள் வகை வகையாக பாடல்
விருந்து வைத்தேன்.. கண்ணதாசன் .. வாலி மற்றும்
ஏனைய கவிஞர்கள் என்பது என் வரிசை…………….
சுவையாய் இனிக்கும் மூவகைக் கனிகளாய்..
முத்தமிழ் முழக்கம் .. அற்புதமாய் நடக்கும்
தத்துவம் காதல் பக்தி பாசம் எனும் அத்தனையும்
முத்திரை பதித்தாற்போல் பதிவு செய்தேன்…
அண்ணா கண்ணன் எனும் அருந்தமிழ் வித்தகர்
தன்பெரும் முயற்சியில் முகிழ்த்த வல்லமை..
ஈரோட்டில் கிட்டிய இன்னொரு முத்து இவர் ..
பவள சங்கரி என்பதவர் திருநாமம் ..
ஈடிலா உழைப்பினால் இணைய தள உலகிலே
வல்லமையின் பதிவுகள் வரலாறு படைத்துவர..
இன்னும் பல வித்தகர்கள் பின்புலமாய் இருந்துவர..
முதல் ஐந்து ஆண்டினைக் கடந்து.. அகவை
ஆறில் நுழைகிறதே.. அறுசுவை விருந்து தருகிறதே..
பற்பல தலைப்புகள் .. பகுக்கப்படுவதும்..
பல்வேறு அறிஞர்கள் தம் கருத்தைப் பதிவதும்
வல்லமையாளர் விருதுகள் தருவதும்…
போட்டிகள் கூட நடத்தி வருவதும்…
வெற்றியாளர்கள் களித்து மகிழ்வதும்..
அவரவர் திறமை அரங்கேறுவதும்…
அன்புடன் அனைவரும் ஆதரவு பெறுவதும்
ஒன்றுடன் ஒன்று சளைப்பில்லை என்றே காணும்
வல்லமை – நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும்
உள்ளத்து நன்றிகளும் உளமார்ந்த வாழ்த்துகளும்…
உரித்தாக்குகின்றேன்..
கவிஞர் காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052
kaviri2015@gmail.com
kaviri2015@gmail.com