என்ன சொல்லலாம்?

 

மதுமிதா


கையில் மிக்ஸியின் ஜாருடன்

மிக்ஸியின் அடிப்பாகத்தையும்

பெரியதோர் பையில் இடுப்பில் சுமந்துகொண்டு

சிடி வாங்கும் கடையில் நுழைபவளை

என்னவென்று சொல்லலாம்?

 

நளினமாக கையில்

நாகரீகமான பெட்டியை சுமந்து நிற்கும்

சென்னை நோக்கிச் செல்ல காத்திருக்கும்

இரயில் பயணிகளுக்கிடையில்

இடையில் ஏந்திய குடத்துடன்

நடந்து வருபவளை
என்னவென்று சொல்லலாம்?

 

உதவியாளாரின்றி

முப்பது நபருக்கு

இட்லி தோசை மூன்று நிறச்சட்னி பொடி

சப்பாத்தி சப்பாத்திக்கான குருமா என

முகத்தில் புன்னகையுடன் செய்பவளை

இடையிடையில் கவிதை என கிறுக்குபவளை

என்னவென்று சொல்லலாம்?

*

 

படத்திற்கு நன்றி.

1 thought on “என்ன சொல்லலாம்?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க