கபிலன் வைரமுத்து, கனகதூரிகா நூல்கள் வெளியீ்டு
கபிலன் வைரமுத்து, கனகதூரிகா ஆகியோரின் மூன்று நூல்களைத் திரிசக்தி பதிப்பகம் உருவாக்கியுள்ளது. இவற்றின் வெளியீட்டு விழா, 31.08.2010 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குச் சென்னை, அண்ணா சாலை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நிகழ உள்ளது.
வெளியாகும் நூல்கள்:
கபிலன் வைரமுத்துவின்
1. ‘கவிதைகள் 100’ என்ற கவிதைத் தொகுதி
2. ‘Planet Boomerang the 41 e-mails’ என்ற ஆங்கில (மொழிபெயர்ப்பு) நாவல்
கனகதூரிகாவின்
3. ‘இருள் தின்னும் இரவுகள்’ என்னும் அழைப்பு மையங்களைப் பற்றிய நாவல்.
இந்த நிகழ்வுக்குத் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு, கவிஞர் வாலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கொள்கின்றனர்.
இந்த நிகழ்வுக்கு அனைவரும் வருமாறு, திரிசக்தி பதிப்பக முதன்மை ஆசிரியர் ரமணன் கேட்டுக்கொண்டுள்ளார்.