ஜன்னலைத் திறப்பதற்குமுன்
இந்தப் பக்கம்
நின்றிருந்தேன்…
திறந்த பிறகு
அந்தப் பக்கம்
நிற்பதாகக் கூறியவர்கள்
அந்தப் பக்கமே
நின்றார்கள்…
பக்கங்களின் அடைதல்களில்
ஜன்னலின் முன்பின்
இடம் மாறிக் கொண்டே
நகரும் வீட்டில்
நான் ஏழை…
என் எதிரே பணக்காரன்…
அவனுக்கும் அப்படியே
என்றபோது
வேகமாய் வந்து
உடைத்தும் விட்டு
உடைந்தும் போனது
பொதுவான கை ஒன்று…!
நான் கவிஜி.. (B.COM, MBA, DIP IN ADVERTISING.)
கோவையில் வசிக்கிறேன்…
கவிதை தேடுகிறேன்…. கதைகளாய் கிடைக்கிறேன்…..
காடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது….
குறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது… பிடிக்கும்…….
வாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்….
தாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்…
“சே” வின் மிகப் பெரிய பற்றாளன்…
சக மனிதனை மதிப்பவன்….
மனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்…
தொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்….