ஆசிரியரை நினைவுகூா்வோம்!
-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
அன்னை தந்தையை அடுத்துவரும் ஆசானே – உம்
ஆசி ஒன்றிருந்தால் உலகையே தான் வெல்லலாமே 
இலைமறை காய் போன்ற மாணவர் அறிவதனை
ஈடற்ற கலங்கரை விளக்கமாய் ஒளிரச் செய்பவரே
உன்னதமான நின் கரத்தால் பாலகர் கரம் பிடித்து
ஊக்கமுடன் ‘அ, ஆ’ எழுதக் கற்றுக் கொடுப்பவரே
எழுத்தறிவித்த இறைவனே, எங்கள் குருநாதரே
ஏகமனதுடன் உமை இன்று நினைவுகூா்வோம் நாமே
ஐயம் தெளிவித்துக் கல்விக்கண் திறக்கும் கர்த்தாவே
ஒளிமயமான எதிர்காலம் எங்களுக்கு நீர் வழங்கி
ஓய்வின் பின்னும் உறுதுணையாய் உடன் நிற்கின்றீரே
வாழ்வில் எத்தனைக் கட்டங்கள் நாங்கள் கடந்து வரினும்
வாழவைக்கும் குருவே நின்தாள் தொழுது பணிவோமே!
