கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”அசல மனத்துள் அவதரித்து அன்பாய்,
குசலம் விசாரிப்பான் கண்ணன் -வசன –
திரைக்கதை பாகவதன் ,திவ்யப் பிரபந்தன் –
சிறைக்கதவை விட்டகன்ற சேய் “….
”ஆன்மக் கவசம் அணிந்தைம் புலனடக்கி,
நான்மன நூறை நசுக்கிடு, -வீணெண்ணம்,
கொள்ளாய்” எனவசன கீதை மொழிந்தனன்,
புள்வாயைக் கீண்ட பிரான்”….கிரேசி மோகன்…..
புள்ளின் வாய் கீண்டானை-பறவை வடிவில் வந்த அரக்கனைக் கிழித்தானை….