தாயின் மனமும் தமிழும் ஒன்றே!

-தமிழ்நேசன் த. நாகராஜ்

தமிழா நீ…
தமிழோடு நிமிர்ந்து நின்றாலே
தமிழ் இமயத்தைத் தாண்டி நின்றிடுமே
பிறமொழி வேடம் அணிந்தாலே                            tamil mella sagathu
உன்மொழித் திறனே அழிந்திடுமே!

சிறுதுளியல்லவே நீ உடனே உலர்ந்துவிட
விடாமல் பொழியும் அடைமழை நீ…!
சிறுஏணியல்லவே நீ  ஏறிமிதிபட
ஏறவே தயங்கும் எரிமலை நீ…!

வெற்று ஓசையல்லவே நீ ஓய்ந்துவிட
பற்றி வானத்தையே பிளந்திடும் பேரிடி நீ…!
சுடரல்லவே நீ அணைந்துவிட
சுட்டெரிக்கும் சூரியன் நீ…!

தமிழ் மெல்லச் சாகாது
நீ அன்னிய மொழியை நினைந்து
அன்னைத் தமிழை மெல்லமறந்தாலே
அமைதியாய்ச் சாகும்!

தாயின் மனமும் தமிழும் ஒன்றே
தரம் பாராமல் நீ கண்ணாய்ப் பார்த்தாலே
உன்னைப் பொன்னாய்க் காத்திடுமே!

வாழ்க தமிழ்!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க