இலக்கியம்கவிதைகள்

நான்

-பா வானதி வேதா. இலங்காதிலகம்

நான் யாரெனும் தன்னறிவு நன்மை
நான் முயல் நான் எறும்பு
நான் திமிரற்றவள் மானம் உள்ளவள்
நான் படித்தேன் யாழ் கோப்பாயில்
நான் கட்டுரை கவிதைகள் எழுதுகிறேன்
விண்மீன்களாய் என்னைச் சுற்றுது அவைகள்
நான் உன் அன்பை நினைத்து
என்னை மறக்கிறேன் இது காதல்!

இயற்கை அழகில் தொலையும் நான்
இசையும் கவியில் மயங்கும் நான்
அசையும் மழலையில் உருகும் நான்
அகவும் மயிலை ரசிக்கும் நான்
நான் (தன்)முனைப்பு நீக்கும் நான்
தன்னான்ம உணர்வு பெறுவது தெளிவு
’தான்’ என்ற கர்வ அழிவில்
’நான்’ என்பது இனிமை கீதமாகும்!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க