நடராஜன் கல்பட்டு

யப்பன் வழிபாடு 2

 

ஐயப்பனை தரிசிக்கச் செல்பவர்கள் சாதாராணமாகத் தனி நபர்களாகச் செல்வதில்ல்.  தனித் தனிக் குழுமங்களாகத் தான் செல்வார்கள்.  இதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம் இந்த வழிபாட்டின் தனித் தன்மை.

இரண்டாவது செய்முறையை பல முறை சபரி மலை சென்று வந்த ஒருவரை குருவாக வரித்து அவறிடம் இருந்து கற்க வேண்டும்.

மூன்றாவது காரணம் ஐயப்பன் கோவில் காடுகளின் நடுவே மலை மீது இருப்பதால் போகும் வழியில் தனிமையில் சென்றால் காட்டு மிருகங்களின் தாக்குதலுக்கு உட்படலாம் என்பது.

இந்த வழிபாட்டின் மிக முக்கியமான ஒன்று இதில் ஈடு படுவோர் நான், எனது என்பதை மறந்து எல்லோரும் ஒன்றே என்ற மனப் பாங்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அதனால் தான் அய்யப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சாமி என்றோ ஐயப்பா என்றோதான் அழைத்திடுவார்கள்.  கூட்டமாகச் செல்லும்போது ஒரு தனிப் பட்டட நபரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால், டாக்டர் சாமி, எஞ்சினியர் சாமி, கார் சாமி என்றோ தான் அழைப்பார்களே தவிற பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டார்கள்.  பெயர் இந்த பூத உடலோடு இணைந்தது.  எல்லோரும் சமம் என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவே எல்லோர் உள்ளும் இருக்கும் சாமியை அழைக்கிறார்கள்.

சபரி மலை செல்ல விழைவோர் யாத்திரை கிளம்பும் முன் நாற்பத்தெட்டு நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.  அப்படி விரதம் இருக்கும் போது சில முக்கிய கோட்பாடுகளை அனுசரிக்க வேண்டும்.  அவை சுமார் பன்னிரண்டு.  என்ன வென்று பார்ப்போம் அவற்றை.

  1. சபரி மலை செல்ல விரும்புவோர் கருப்பு (சிறந்தது) அல்லது     கரு நீல ஆடைகளே அணிய வேண்டும்.
  2. கால்களில் காலணிகள் அணியக் கூடாது.
  3. மிகவும்  எளிமையான் மரக் கறி உணவே, அதுவும் முடிந்தால் ஒரே ஒரு வேளை மட்டுமே, உண்ண வேண்டும்
  4. குளிப்பது பச்சைத் தண்ணீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.
  5. தினமும் இரு வேளையும் குளிதுவிட்டு அயப்பனின் படத்தையோ, பதுமையையோ வைத்துப் பூசை செய்ய வேண்டும்.  அவ்வாறு பூசை செய்யும்போது, ‘சுவாமியே சரணம்’, ‘ஐயப்ப சரணம்’, என்று பல முறை(குறைந்தது 108 முறைகள்) உரக்க ‘சரணம் விளிக்க’ (கூப்பிட) வேண்டும்.
  6. யாத்திரை புறப்படு முன்னர் குழுவின் குரு சாமியின் மேற் பார்வையில் ‘பள்ளிக் கட்டு’ அல்லது ‘இருமுடி’என்று சொல்லப் படுவதைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
  7. விரதம் ஆரம்பிப்பதின் அறி குறியாக மாலை (உத்திராட்சம், துளைசிக் கட்டை, வெள்ளெருக்குக் கட்டைஅல்லது கண்ணடி இவற்றால் ஆன 108 மணிகள் கொண்ட ஜப மாலை) அணிந்த பின் ஒருவரை ஒருவர் ‘சாமி’என்றோ ‘ஐயப்பா’ என்றோ தான் அழைத்துக் கொள்ள வேண்டும்.
  8. நாற்பத்தி எட்டு நாட்களும் புலால் உண்ணல், பீடி சிகெரெட்  சுருட்டு இவை பிடித்தல், மது அருந்துதல், பாலியல் சுகம் காணல் இவை முற்றிலுமாகத் தவிர்க்கப் பட வேண்டும்.

 

09,  இந்த நாற்பத்தெட்டு நாட்களில் ஒரு நாள் ஏழைகளுக்கும், சக பக்தர்களுக்கும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

  1. விரத நாட்களில் வெளியில் உணவு உண்ணுதலை முற்றிலு மாகத் தவிர்க்க வேண்டும்.
  2. வெளியே சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் குளிக்க வேண்டும்.
  3. 10 வயதுக்கு மேல் ஐம்பது வயதுக்குட் பட்ட பெண்களை உடன் அழைத்துச் செல்லக் கூடாது.

 

இந்தப் பன்னிரெண்டு கட்டுப்பாடுகளுமே காரணமின்றி வைக்கப் பாட்டவை அல்ல.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணி இருக்கிறது.

காரணங்களை நாளை பார்ப்போம்.

(தொடரும்….)

நடராஜன் கல்பட்டு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *